Published : 11 Aug 2019 08:17 AM
Last Updated : 11 Aug 2019 08:17 AM

மூணாறில் முழுவீச்சில் நடக்கும் மீட்புப் பணிகள்: ‘ரெட் அலர்ட் ’ தொடர்வதால் பொதுமக்கள் அச்சம்

மூணாறு

மூணாறில் நேற்று மழை ஓரளவு குறைந்ததால் சீரமைப்புப் பணி முழுவீச்சில் நடக்கிறது. 15 கி.மீ.க்கு ஒரு மண் அள்ளும் இயந்திரம் ஒதுக்கப்பட்டு போர்க்கால அடிப் படையில் மண் சரிவு சீரமைக் கப்படுகிறது. தேனி வழித் தடத் தில் பேருந்துகள் நேற்று இயக்கப் பட்டன.

இடுக்கி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரியவாரை, சின்னக்கானல், பழைய மூணாறு உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. 40-க்கும் மேற் பட்ட இடங்களில் சிறிய அளவிலான மண் சரிவும், லாக் ரோடு உள்ளிட்ட இடங்களில் பெரிய அளவிலான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

கனமழையால் முதிரை புழை ஆற்றில் நீர்ப் பெருக்கு அதிகரித்துள்ளது. பெரியவாரை தரைப்பாலம் அடித்துச் செல்லப் பட்டதால் உடுமலைப்பேட்டை வழித்தடம் துண்டிக்கப்பட்டு பள்ளிகளுக்கு விடுமுறை விடப் பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் வரவும் தடை விதிக்கப்பட் டது.

நேற்று மழை ஓரளவு குறைந்த தால் சீரமைப்புப் பணிகள் முழு வீச்சில் தொடங்கின. 15 கி.மீ.க்கு ஒரு மண் அள்ளும் இயந்திரம் ஒதுக்கப்பட்டு மண் சரிவுகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

2 தற்காலிக முகாம்

நேற்று பூப்பாறை, ராஜகுமாரி, குஞ்சுத்தண்ணி சாலை சரி செய் யப்பட்டது. இதனால் தேனியில் இருந்து மூணாறுக்கு பஸ் போக்குவரத்து தொடங்கியது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வர்கள் தேவிகுளம், மூணாறு ஆகிய 2 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேயிலை, ஏலக்காய் தோட்டங் களில் நிலச்சரி ஏற்பட்டு ஏராளமான பயிர்கள் சேதமடைந்துள்ளன.

மூணாறில் மழை ஓரளவு குறைந் தாலும் ரெட் அலர்ட் விலக்கப்படாத தால் இரவில் கனமழை பெய் யக்கூடும் என பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x