கேரளா செல்லும் 50 விரைவு ரயில்கள் ரத்து

கேரளா செல்லும் 50 விரைவு ரயில்கள் ரத்து
Updated on
1 min read

சென்னை

கேரளாவில் கனமழை பெய்து தண்டவாளங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மேலும் 50-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் பாலக்காடு கோட் டத்தில் பல்வேறு இடங்களில் தண்டவாளங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இத னால், நிலச்சரிவு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக ரயில்களின் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள் ளது.

சென்னை சென்ட்ரல் (எம்ஜிஆர்) - மங்களூர் அதி விரைவு ரயில் (12685), ஆலப்புழா அதிவிரைவு ரயில் (22639), மங்களூர் வெஸ்ட்கோஸ்ட் (12695), திருவனந்தபுரம் அதி விரைவு ரயில் (12696), எர்ணாகுளம் - காரைக்கால் (16188), புதுச்சேரி - மங்களூர் (16857), கோவை - மங்களூர் (56323) உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களில் நேற்றைய (10-ம் தேதி) சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு ரயில்கள் இயக்கம்

இதற்கிடையே, எர்ணாகுளம் - சென்னை எழும்பூர், சென்னை சென்ட்ரல் - கொல்லம் இடையே சிறப்பு ரயில்களும், கேஎஸ்ஆர் பெங்களூர் - கொல்லம் பயணிகள் சிறப்பு ரயிலும் நேற்று இயக்கப்பட்டன.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in