Published : 11 Aug 2019 07:51 AM
Last Updated : 11 Aug 2019 07:51 AM

போதிய மழை இல்லை என்பது உண்மை அல்ல; சென்னையில் மழை அளவு தொடர்ந்து அதிகரிப்பு: நீர் ஆவியாகி வீணாவதை தடுக்க வல்லுநர்கள் யோசனை

ச.கார்த்திகேயன்

சென்னை

சென்னையில் போதிய அளவு மழை இல்லை என்பதில் உண்மை யில்லை. பெய்யும் மழையின் அளவு நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. எனவே, அந்த நீர் ஆவியாகி வீணாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வல்லுநர்கள் கருத்து தெரி வித்துள்ளனர்.

சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் 'சென்னையில் நீர் மேலாண்மை’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் துணை தலைமை இயக்குநர் ஒய்.இ.ஏ.ராஜ் பேசிய தாவது:

‘சென்னைக்கு போதிய மழை கிடைக்கவில்லை, நாளுக்குநாள் மழை அளவு குறைந்து வருகிறது’ என கூறப்பட்டு வருவதில் உண்மை இல்லை. சென்னையில் நாளுக்கு நாள் மழைப் பொழிவு அதிகரித்தே வந்துள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் 1903, 1996, 2005 ஆகிய ஆண்டு களில் முறையே 1946 மி.மீ, 2438 மி.மீ, 2562 மி.மீ மழை பெய்துள் ளது. அதேபோன்று சென்னை மீனம் பாக்கத்தில் 1977, 1985, 2005, 2015 ஆகிய ஆண்டுகளில் முறையே 1798 மி.மீ, 2214 மி.மீ, 2394 மி.மீ, 2453 மி.மீ மழை பெய்துள்ளது.

1969-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர் ஆகிய மாவட் டங்களில் சராசரியாக ஆண்டுக்கு 115 செ.மீ முதல் 135 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மீனம் பாக்கத்தில் சராசரியாக 139 மி.மீ முதல் 144 மி.மீ வரை மழை பெய்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் நுங்கம் பாக்கத்தில் சராசரி மழை அளவு 134 செ.மீ.ல் இருந்து 144 செ.மீ ஆக, அதாவது 10 செ.மீ மழை அதிகரித்துள்ளது. மீனம் பாக்கத்தில் 142 செ.மீ,ல் இருந்து 146 செ.மீ ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 1969-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான 50 ஆண்டு காலத்தில் நுங்கம் பாக்கத்தில் 1973, 1974, 1982, 1986, 1998, 2003, 2018 ஆகிய 7 ஆண்டுகளில் மட்டுமே 100 செ.மீ.க்கும் குறைவாக மழை பெய்துள்ளது.

அதேபோல், மீனம்பாக்கத்தில் 1974, 1982, 2003 ஆகிய 3 ஆண்டு களில் மட்டுமே 100 செ.மீ.க்கும் குறைவாக மழை பெய்துள்ளது. அதனால் சென்னையில் மழை யின் அளவு குறைந்திருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

இக் கருத்தரங்கில் பங்கேற்ற தமிழ்நாடு பேரிடர் அபாய தணிப்பு முகமை ஆலோசகர் (நீரியல் மற்றும் வெள்ளத் தடுப்பு) டி.காந்திமதிநாதன் கூறியதாவது:

சென்னையில் ஓராண்டில் கிடைக்கும் மழைநீரில் 200 மி.மீ அளவுக்கு ஆவியாகி விடுகிறது. தரமணியில் உள்ள பொதுப்பணித் துறை வளாகத்தில் ரூ.1 கோடியில் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளது. இது 36 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 10 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 6 லட்சம் லிட்டர் மழைநீரைத் தேக்க முடியும். அதில் மழைநீர் ஆவியாக வாய்ப்பே இல்லை. நகர்ப்புறங்களின் அருகில் புதிய நீர்த்தேக்கங்களை ஏற்படுத்த இனி வாய்ப்பில்லை. அதில் பல சிக்கல்களும் உள்ளன. எனவே நகர்ப்புறங்களில் கீழ்நிலை நீர்த் தேக்கம் சிறந்த தீர்வாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அண்ணா பல்கலை. நிபுணர்

அண்ணா பல்கலைக்கழக நீர்வள ஆதார மைய முன்னாள் இயக்குநர் ஆர்.சக்திவடிவேல் கூறியதாவது:

இனிவரும் காலங்களில் கட்டப் படும் அடுக்குமாடி குடியிருப்பு களில் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி கள் அமைப்பதை சிஎம்டிஏ கட்டாய மாக்க வேண்டும். மனைப் பிரிவு களை உருவாக்கும்போது ஒதுக் கப்படும் திறந்தவெளி நிலங்களின் அடியிலும் நீர் தேக்க கட்டமைப்பை அமைக்க வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித் தார்.

கீழ்நிலை மழைநீர் தேக்கத் தொட்டி

சென்னை மாவட்டத்தின் வடகிழக்கு பருவமழைக்கால சராசரி மழைப்பொழிவு 786 மிமீ. ஆனால் வேலூர் மாவட்டத்தின் சராசரி மழைப்பொழிவு 348 மிமீ. தமிழகத்தின் ஆண்டு சராசரியை (440 மிமீ) விட குறைவு. எனவே, கிடைக்கும் மழைநீரை சேமிக்கும் விதமாக தொலைநோக்கு பார்வையுடன் பெரிய தொழில்நுட்பம் ஏதும் இன்றி வேலூரில் உள்ள முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு முன்பே, கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. கல்லூரி கட்டிடங்களில் சேகரமாகும் மழைநீர் நேரடியாக இந்த தொட்டிகளில் சேமிக்கப்படுகிறது. தேவைப்படும்போது அவை அங்குள்ள தோட்டச் செடிகளுக்கு பாய்ச்சப்பட்டு வருகிறது. இதன்மூலம் நிலத்தடிநீரை உறிஞ்சுவதை கல்லூரி நிர்வாகம் குறைத்துவந்துள்ளது. இந்த தொட்டியின் மேம்பட்ட வடிவமே, தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட தரமணி கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x