காஞ்சிபுரம் அத்திவரதர் விழாவில் போலீஸார் அத்துமீறுவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு: 3 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்

காஞ்சிபுரம் அத்திவரதர் விழாவில் போலீஸார் அத்துமீறுவதாக பக்தர்கள் குற்றச்சாட்டு: 3 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
Updated on
1 min read

காஞ்சிபுரம்

அத்திவரதர் வைபவத்தில் 40-ம் நாளான நேற்று இளஞ்சிவப்பு பட்டாடை அணிந்து அத்திவரதர் காட்சி அளித்தார். கடந்த ஒரு வாரமாகக் கூட்ட நெரிசல் அதிகம் இருந்த நிலையில் நேற்று நெரிசல் சற்று குறைந்து காணப்பட்டது.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழா என்பதால் லட்சக்கணக்கான மக்கள் அத்தி வரதரைத் தரிசனம் செய்து வரு கின்றனர். ஏற்கெனவே 70 லட்சம் பேர் அத்திவரதரை தரிசித்த நிலை யில் நேற்று முன்தினம் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் தரிசனம் செய் தனர். வழக்கமான கூட்ட நெரிசல் நேற்று இல்லாமல் இருந்தது. சுமார் 3 லட்சம் பக்தர்கள் நேற்று அத்தி வரதரை தரிசிக்க வந்தனர். கிழக்கு கோபுரம் வழியாக வரிசையில் வந்த பொதுமக்கள் 4 மணி நேரத்தில் சுவாமியை தரிசனம் செய்தனர்.

விஐபி மற்றும் விவிஐபி வரிசை யில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. விவிஐபி வரிசையில் அனுமதி அட்டை இல்லாத பலர் முறைகே டாக அனுமதிக்கப்படுவதாகவும் அதனால்தான் நெரிசல் ஏற்படு வதாகவும் புகார் எழுந்தது.

முறைகேடு புகார்

முக்கிய பிரமுகர்கள், மிக முக்கிய பிரமுகர்கள் வரிசையில் பலர் அனுமதி அட்டை இல்லா மல் அனுமதிப்பதன் பின்னணி யில் முறைகேடுகள் நடைபெறுவ தாக மக்கள் குற்றம்சாட்டியுள் ளனர்.

போலீஸார் நூற்றுக்கணக் கானவர்களை அழைத்து வந்து கிழக்கு கோபுரத்தின் அருகே நேராக அத்திவரதர் தரிசனத் துக்கு செல்லும் வரிசையில் விடுகின்றனர். வரிசையில் நிற் கும் பொதுமக்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினால் அவர் களை மிரட்டுகின்றனர்.

விசாரிக்க வலியுறுத்தல்

விவிஐபிக்களுக்கு சிறப்பு அனுமதி பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காவல் துறையைச் சேர்ந்த சிலர் தங்களது உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று வெளி மாநிலங்களைச் சேர்ந் தவர்களையும், பொது மக்கள் சிலரையும் அழைத்து வந்து விவிஐபி தரிசன பாதையில் விடுகின்றனர். அவர்களும் எந்த வித சிரமமும் இன்றி நேரடியாக அத்திவரதரை தரிசிக்கின்றனர். இதன் பின்னணியில் ஆயிரக்கணக் கில் பணம் கைமாறுவதாக புகார் கள் எழுந்துள்ளன.

பக்தர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஏராளமான போலீஸாரும் ஊழியர் களும் ஈடுபட்டுள்ள நிலையில், ஒருசில போலீஸார் அத்துமீறுவ தாக பக்தர்கள் அதிருப்தி தெரி விக்கின்றனர். இதுபோன்ற செயல் களில் ஈடுபடும் காவலர்களையும், அவர்களை உடன் அழைத்து வரு பவர்களையும் கண்காணித்து விசா ரணை நடத்த வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in