

சென்னை
நீலகிரி மாவட்டத்தில் கனமழைக்கு பலியான 5 பேரின் குடும்பங் களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப் படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கூடுதலாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் அடங்கிய குழுக்கள், 66 ராணுவ வீரர்கள் உட்பட 491 பேர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
கனமழை மற்றும் நிலச் சரிவால் பாதிக்கப்பட்ட 1,704 பேர் 28 பேரிடர் மீட்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவு மற்றும் இடிபாடுகளை சீர் செய்வதற்காக 29 ஜேசிபி இயந்திரங்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.
இப்பகுதிகளில் 30 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
காட்டுக்குப்பையில் கனமழை யில் சிக்கியிருந்த 36 மின் பணியாளர்களும், பொது மக்க ளும் பத்திரமாக மீட்கப்பட்டுள் ளனர். அவலாஞ்சியில் சிக்கியிருக் கும் 40 பேருக்கு தேவையான உணவுப் பொருட்களை ஹெலி காப்டர் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்கும்படி சூலூரில் உள்ள இந்திய விமானப்படை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் ஆகியோரை உடனடியாக நீலகிரி மாவட்டத்துக்கு சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள் ளது.
உயிரிழந்த 5 பேரின் குடும்பங் களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு அவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.