

சென்னை
ரயில்வேயில் பணியாற்றும் அதி காரிகள், ஊழியர்களின் பணி திறனை ஆய்வு செய்து அறிக் கையை தயாரித்து அனுப்ப வேண்டுமென்ற வாரியத்தின் உத்தரவுக்கு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
மேலும், நாடுமுழுவதும் லட்ச கணக்கான ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்க முயற்சிப் பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
ரயில்வே வாரியம் வெளியிட்டி ருந்த உத்தரவில், "ரயில்வேயில் நிர்வாகத்தை வலுப்படுத்தவும் குறு கிய கால இடைவெளியில் செயல் திறனை மதிப்பீடு செய்யவும் நடவ டிக்கை எடுக்கப்படுகிறது. குரூப் ஏ-யில் 50 ஆண்டுகள் பணிநிறைவு செய்தவர்கள், குரூப் பி-யில் 55 வயது கடந்தவர்கள், குரூப் சி-யில் 55 வயதை கடந்தவர்களின் விபரங்களை தேர்வு செய்து, அவர் களின் பணி திறனை செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு நாடுமுழுவதும் உள்ள 3 லட்சம் ரயில்வே ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.
தொழிற்சங்கங்கள் கண்டனம்
என்.கண்ணையா (பொதுச் செயலாளர், எஸ்ஆர்எம்யு): ரயில் வேயில் 30 ஆண்டுகளாக பணி யாற்றி 55 வயது மேல் உள்ளவர்கள் இருந்தால், அவர்களது பணித்திறன் தொடர்பாக அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது.
அதன்படி, ரயில்வேயில் 3 லட்சம் பேரின் விவரங்களை வாங்கி வைத் துள்ளது. ஊழியர்கள் முதல் தொழி லாளர்கள் வரை எல்லோரும் கடுமையாக உழைத்து வருபவர் கள். வேலைப்பளு காரணமாக ஒரு சில நேரங்களில் தவறுகள் நடக் கலாம். அதன் மீது நோட்டீஸ் அனுப்பினால் எந்த பிரச்சினையும் இல்லை. இதுதொடர்பாக நேர்மை யான விசாரணை நடத்த வேண் டும். ஆனால், அப்படி எதுவும் செய்யாமல், பாலக்காடு கோட்டத் தில் ரயில்வே அலுவலர் ஒருவ ருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப் பட்டுள்ளது. ரயில்வே ஊழியர்கள் மீது தேவையில்லாமல் நடவடிக்கை எடுத்து அவர்களை வேலையில் இருந்து நீக்க முயற்சிக்க கூடாது.
சூர்யபிரகாஷ் (பொதுச் செயலாளர், எஸ்ஆர்இஎஸ்): ரயில்வேயின் இந்த முடிவைக் கண் டித்து நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தவுள் ளோம். வரும் 13-ம் தேதி தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடத்தவுள்ளோம்.
மனோகரன் (துணை பொதுச் செயலாளர், டிஆர்இயு): 30 ஆண்டுகள் பணிமுடித்த அல்லது 55 வயது நிறைவு பெற்ற ரயில்வே ஊழியர்களுக்கு பணித்தகுதி ஆய்வு செய்து கட்டாய ஓய்வு வழங்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அனைத்து ஏ, பி, சி மற்றும் டி பிரிவு ஊழியர் களுக்கு இந்த உத்தரவு பொருந் தும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எத்தனை ஊழியர்கள் கட்டாய பணி ஓய்வுக்கு பரிந்துரைக்கப்பட் டார்கள், எத்தனை ஊழியர்கள் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டார் கள் என்ற விவரங்கள் சம்பந் தப்பட்ட அமைச்சகத்துக்கு தெரியப் படுத்த வேண்டுமென கூறப்பட் டுள்ளது. இதன் மூலம் அதிகாரி கள் செயல்களுக்கு துணைபோ காத நேர்மையான பணியாளர் கள், மேற்பாரவையாளர்கள் பழி வாங்கப்படுவார்கள். எனவே, இந்த உத்தரவை ரயில்வே கைவிட வேண்டும்.