

சென்னை
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் அதிமுகவுக்கு வாக்க ளித்த வாக்காளர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளருமான பழனி சாமி ஆகியோர் நன்றி தெரிவித் துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவுகள், அதிமுக செல் வாக்கை உணர்த்தும் வகையில் உள்ளன. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் கண்ட வெற்றிச் சின்ன மாம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,190 வாக்குகள் பெற்றிருக்கிறார். மிக மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறார். இது, அதிமுகவைப் பொறுத்தவரை வெற்றி என்ற இலக்கணத்துக்குள் அடங்கும் தேர்தல் முடிவு என்பதை யாரும் மறுக்க முடியாது.
வேலூர் மக்களவைத் தொகுதி யின் தனித் தன்மை குறித்தும், அங்கு எத்தகைய சூழலில் வாக்குப் பதிவை அதிமுக எதிர்கொண்டது என்பது பற்றியும், 46.51 விழுக்காடு வாக்குகளை அதிமுக வேட்பாளர் பெற்றிருப்பதன் முக்கியத்துவம் பற்றியும் நன்கு அறிந்த அரசியல் ஆர்வலர்கள் அனைவருக்கும் தெளிவாகப் புரியும்.
முன்னாள் முதல்வர் ஜெயல லிதா அளித்துச் சென்ற வாக்கு களின் சதவீதம் சிந்தாமல் சிதறா மல் நம்மிடம் அப்படியே உள்ளது என்பதைத்தான், வேலூர் தொகுதி யில் இரட்டை இலை பெற்றிருக்கும் வாக்குகள் பறைசாற்றுகின்றன. இத்தகைய மகத்தான உண்மையை உலகுக்கு உணர்த்திட, தேர்தல் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு அல்லும் பகலும் அயராது பாடுபட்ட அமைச் சர்கள், கட்சியின் தலைமை நிர்வாகி கள், மாவட்டச் செயலாளர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மற்றும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள், எம்எம்ஏக்கள், பல் வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி களின் தலைவர்களுக்கும், தொண் டர்களுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக இரட்டை இலை சின்னத் துக்கு வாக்களித்த அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.