

பூந்தமல்லி
காங்கிரஸ் முன்னாள் எம்பி இரா.அன்பரசுவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது மகனும், மகளும் போலீஸில் அளித்த புகாரின் அடிப்படையில், நேற்று அன்பரசு உடல் பிரேதப் பரிசோத னைக்கு உட்படுத்தப்பட்டது.
முன்னாள் காங்கிரஸ் எம்பி இரா.அன்பரசுக்கு நேற்று முன் தினம் பிற்பகல் 3 மணியளவில், மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் போரூரில் உள்ள தனியார்மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பின்னர், நேற்று முன்தினம் மாலையே காட்டுப்பாக்கம் இல் லத்தில் இறுதி அஞ்சலிக்காக அன்பரசுவின் உடல் வைக்கப்பட் டது.
இந்நிலையில், தனது தந்தை யின் மரணத்தில் மர்மம் இருப்ப தாகவும், அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அன்பரசுவின் மகள் சுமதி பூந்தமல்லி காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு புகார் அளித்தார்.
அதுமட்டுமல்லாமல், அன்பரசு வின் மகனும், முன்னாள் எம்எல்ஏ வுமான அருள் அன்பரசு, தன் தந்தையின் மரணத்தில் சிலர் குழப்பம் விளைவிக்க முயற்சிப்ப தால், அவரது உடலை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என, நேற்று காலை பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த 2 புகார்களின் அடிப்படை யில், வழக்குப் பதிவு செய்த போலீஸார், நேற்று காலை 10 மணி யளவில், அன்பரசுவின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு அன்பரசுவின் உடல், பிற்பகல் 3.30 மணியளவில் மீண்டும் அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மறைந்த இரா.அன்பரசுவின் உடலுக்கு தமிழக காங்கிரஸ் முன் னாள் தலைவர்களான குமரி அனந் தன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.வி. தங்கபாலு, கிருஷ்ணசாமி, காங்கிரஸ் எம்பிக்களான விஷ்ணு பிரசாத், வசந்தகுமார், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மாலை 5 மணியளவில், காட்டுப்பாக்கம் மின் மயானத்தில் அன்பரசுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
அன்பரசுவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை விரைவில் கிடைக்கும். அப்போது அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக எழுந்த புகாருக்கு விடை கிடைக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.