ஆன்லைன் முன்பதிவு ரயில் டிக்கெட்களுக்கு மீண்டும் சேவை கட்டணம் வசூலிக்க ஐஆர்சிடிசி முடிவு: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆன்லைன் முன்பதிவு ரயில் டிக்கெட்களுக்கு மீண்டும் சேவை கட்டணம் வசூலிக்க ஐஆர்சிடிசி முடிவு: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை

ஆன்லைன் முன்பதிவு ரயில் டிக்கெட்களுக்கு மீண்டும் சேவை கட்டணம் வசூலிக்க முடிவு செய் யப்பட்டுள்ளது. கட்டண விபரம் தொடர்பான அறிவிப்பு ஒரு வாரத் தில் வெளியாகும் என ஐஆர்சிடிசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும்போது, ஒரு டிக்கெட்டுக்கு ரூ.20 (சிலீப்பர் வகுப்பு), ரூ.40 (ஏசி வகுப்பு) என சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு, பொதுமக்களை மின்னணு பரிமாற்றத்துக்கு ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. குறிப் பாக, ஆன்லைனில் பதிவு செய்யப் படும் ரயில் டிக்கெட்களுக்கு சேவை கட்டணம் கிடையாது என அறிவித்தது. இந்த அறிவிப் புக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆன் லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் 75 சதவீதமாக அதிகரித்தது.

சேவை கட்டணம் ரத்து மூலம் ரயில்வே துறைக்கு ஆண்டு தோறும் ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. எனவே, சேவை கட்டண தொகையை மத் திய அரசு அளிக்க வேண்டுமென ரயில்வே துறை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலை யில், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவில் மீண்டும் சேவை கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘மத்திய அரசு 2016, நவம்பரில் கொண்டு வந்த பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, ரயில் டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கான சேவை கட்டணத்தை ரத்து செய்தது. இதனால் ஆண்டுதோறும் சுமார் ரூ.500 கோடி இழப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த தொகையை மத்திய அரசு வழங்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகி றோம். ஆனால், மத்திய நிதி அமைச்சகம் இதுவரை எந்த பதி லும் அளிக்கவில்லை. மத்திய பட்ஜெட்டிலும் இதுதொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிட வில்லை.

இதற்கிடையே, ஐஆர்சிடிசி பணிகளை மேம்படுத்த மீண்டும் சேவை கட்டணத்தை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பழைய கட்டணமே நீடிக்குமா? அல்லது இதில் மாற்றம் இருக்குமா? என்பது குறித்து இன்னும் ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in