பிரதமருடன் ஆளுநர் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று டெல்லியில் சந்தித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று டெல்லியில் சந்தித்தார்.
Updated on
1 min read

சென்னை

டெல்லியில் நேற்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்து தமிழக நிலவரம் குறித்து தமிழக ஆளு நர் பன்வாரிலால் புரோஹித் ஆலோசனை நடத்தினார்.

காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப் பட்ட நிலையில், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள் ளது. தமிழகத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், ஆக.7-ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நில வரம் மற்றும் அரசியல் சூழல் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந் தித்துப் பேசினார். அதன்பின் உள் துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்தார். வழக்கமாக மாநிலத் தின் சட்டம் - ஒழுங்கு தொடர்பான மாதாந்திர அறிக்கையை மத்திய உள்துறைக்கு ஆளுநர் அனுப்பு வது வழக்கம். அந்த வகையில், நேற்று அந்த அறிக்கையை உள்துறை அமைச்சரிடம் நேரில் வழங்கி ஆளுநர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக் கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக அப்போது விவாதித் ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், முன்னாள் மத்திய அமைச்சர் மறைந்த சுஷ்மா ஸ்வராஜின் இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தியபின், ஆளுநர் சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in