Published : 04 Jul 2015 08:28 AM
Last Updated : 04 Jul 2015 08:28 AM

கடந்த 1 ஆண்டில் 150 மருந்துகளின் விலை குறைந்துள்ளது: இந்திய மருந்தியல் துறை செயலர் தகவல்

இந்தியாவில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 150 அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது என்று மத்திய மருந்துகள் துறை செயலர் வி.கே.சுப்புராஜ் கூறினார்.

மருந்து பொருட்கள் தொடர்பான ‘பார்மாக் சவுத் 2015’ எனும் 2 நாள் கண்காட்சிக்கு இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று நடந்த இந்த கண்காட்சியை, இந்திய மருந்தியல் துறை செயலர் வி.கே.சுப்புராஜ் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவின் மருந்து உற்பத்தி ரூ.10 கோடியாக இருந்தது. ஆனால் தற்போது அது ரூ.2 லட்சம் கோடி யாக உயர்ந்துள்ளது. இந்த மதிப்பீடு 2020-ம் ஆண்டில் ரூ.4 லட்சம் கோடி யாக உயரும். அதற்கான சூழல் தற் போது உள்ளது. மருந்து உற்பத்தி யாளர்கள் இதனை ஆக்கப்பூர்வ மாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான மருந்து பொருட்களில் ரூ.1 லட்சம் கோடியிலான மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு மொத் தம் 10 ஆயிரம் மருந்து உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 15 சதவீதம் நிறுவனங்கள் மட்டுமே உலக சுகாதார அமைப்பு கூறுகின்ற தரத்தில் மருந்துகளை உற்பத்தி செய்கின்றன.

கடந்த ஓர் ஆண்டில் 150 அத்தியா வசிய மருந்துகளின் விலை குறைந் துள்ளது. மேலும் போலிகளை தடுக் கவும், ஆய்வு ரீதியான பணிகளை ஊக்குவிக்கவும் மத்திய அரசு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் இந்திய மருந்தியல் துறையின் இணை ஆணையர் சுதன்ஷ் பந்த், இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தமிழக தலைவர் எம்.ராஜரத்னம், கவுரவ செயலாளர் ஆர்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x