

மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி இளைஞர் காங்கிரஸ் சார்பில் சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் விஜய் இளஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய சென்னை மக்களவைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் ஆருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய விஜய் இளஞ்செழியன், ‘‘மற்ற நகரங் களைவிட சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் மிக அதிகமாக உள்ளது. 10 கி.மீ.க்கு ரூ.40 கொடுத்து சாதாரண மக்களால் பயணம் செய்ய முடியாது. எனவே, கட்டணத்தை குறைக்க வேண்டும். கட்டணத்தை குறைக்கும் வரை போராடுவோம்’’ என்றார்.