Published : 09 Aug 2019 10:14 AM
Last Updated : 09 Aug 2019 10:14 AM

பாம்பன் ரயில் பாலத்தில் ஆபத்தான சூழலில் பணிபுரியும் தொழிலாளர்கள்

ராமேசுவரம்

ராமேசுவரம் அருகே பாம்பன் ரயில் தூக்குப் பாலத்தில் பாது காப்பு உபகரணங்களின்றி 100 அடி உயரத்தில் தொழிலாளர்கள் பரா மரிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

2.05 கி.மீ. தூரமுள்ள பாம்பன் ரயில் பாலம், 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் உள்ள தூக்குப் பாலம் வலுவிழந்ததை அடுத்து, 2018 டிச.4-ம் தேதி யிலிருந்து 83 நாட்கள் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. புதிய இரும்பு பிளேட்டுகள் பொருத்தி, துருப் பிடிக்காத அலுமினிய பெயின்ட் பூசி புதுப்பிக்கும் பணி நடைபெற்ற பின் பிப்.27-ம் தேதியிலிருந்து மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கப் பட்டது. இதனிடையே, பாம்பன் கடலில் ரூ.250 கோடியில் புதிய ரயில் பாலம் அமைக்க கடந்த மார்ச் 1-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து இரண்டு மாதங் களாக கடல் பகுதியில் மண் பரி சோதனை நடைபெற்றது. ஆனால், அதன்பின் எந்தவித பணியும் நடக்கவில்லை. இந்நிலையில், கடல் காற்றால் தற்போதுள்ள துாக்குப் பாலத்தின் பல பகுதிகளில் இரும்பு பிளேட்டுகள் தற்போது சேதமடைந்துள்ளன. உப்புக் காற்று காரணமாக பெயின்ட் பூச்சுகள் உதிர்ந்துவிட்டன. இதையடுத்து, பராமரிப்புப் பணியை மேற்கொள் ளும் பணி ரயில்வே நிர்வாகம் சார்பில் ஒப்பந்ததாரரிடம் வழங்கப் பட்டுள்ளது.

இப்பணியில் ஈடுபடும் தொழி லாளர்கள் 100 அடி உயரத்தில் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங் களின்றி பராமரிப்புப் பணியை மேற்கொள்கின்றனர். முந்தைய காலங்களில் இது போன்று பணிபுரிந்தபோது தவறி விழுந்து தொழிலாளர்கள் காயமடைந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. எனவே, தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க ஒப்பந்ததாரருக்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி களிடம் கேட்டபோது, பதில் கூற மறுத்து விட்டனர்.

பேரிடர் பாதுகாப்பு அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது: உயரமான இடங்களில் பணியாற்றுவோருக்கு பாதுகாப்பு வலை, தலைக்கவசம், பெல்ட் ஆகியவை வழங்கப்பட வேண்டும். நடுக்கடலில் பரா மரிப்புப் பணி நடை பெறுவதால் தொழிலாளர் தவறி விழுந்தால் அவரை உடனே மீட்க அருகிலேயே படகு நிறுத்தப்பட்டிருக்க வேண் டும். அப்போதுதான் தொழிலாளர் கள் பாதுகாப்பாக பணிபுரிய முடி யும் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x