

சென்னை
முதல்வர், அமைச்சரை விமர்சித்தது ஒரு காரணமாக இருந்தாலும், கட்சி யின் நிர்வாகிகள் பலரும் அளித்த புகார்கள் அடிப்படையில் தான் அமைச்சர் பதவியில் இருந்து அதிரடி யாக மணிகண்டன் நீக்கப்பட்டுள்ள தாக கூறப்படுகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்த லில் ராமநாதபுரம் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர் டாக்டர் மணிகண்டன். இவரது மனைவியும் டாக்டர். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தனது அமைச்சரவையில் மணிகண்டனை சேர்த்து, தகவல் தொழில்நுட்பத் துறையை வழங்கினார். ஜெயல லிதா மறைவுக்குப் பிறகு கட்சியில் குழப்பங்கள் ஏற்பட்டபோது, சசிகலா பக்கம் நின்ற மணிகண் டன், முதல்வர் பழனிசாமி அமைச்சர வையிலும் தொடர்ந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு திடீரென அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் நீக்கப்பட்டார். அவர் வகித்துவந்த தகவல் தொழில்நுட்பத் துறை பொறுப்பு அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சர் உடு மலை ராதாகிருஷ்ணனின் செயல் பாடுகளை விமர்சித்ததுதான் மணி கண்டன் நீக்கத்துக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே மணி கண்டனுக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே மோதல் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அதிமுக வட்டாரத்தில் கூறியதாவது:
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரனின் தீவிர விசுவாசி யாக இருந்தார் மணிகண்டன். அப்போது யாரும் அதை பெரி தாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், பழனிசாமியுடன் ஓபிஎஸ் இணைந்த பிறகும் தனது நிலைப் பாட்டை அவர் மாற்றிக் கொள்ளா மல் இருந்ததார். அத்துடன், ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளை தொடர்ந்து புறக்கணித்து வந்தார். சத்துணவில் காலை உணவு திட்டம் உள்ள தாக தெரிவித்த விவகாரம், முதல்வர் தொடங்கி வைக்கும் முன்பே மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கியது உள்ளிட்ட விவ காரங்களில் முதல்வரின் கண்டிப்புக் கும் ஆளானார்.
அதேபோல், தொகுதி எம்பியாக இருந்த அன்வர் ராஜா. மகளிர் அணியில் உள்ள கீர்த்திகாவின் கணவர் முனியசாமி ஆகியோருடன் கட்சி ரீதியாக மோதல் போக்கையே கடைபிடித்தார். அவர்களும் இது பற்றி அவ்வப்போது முதல்வர், துணை முதல்வரிடம் புகார் தெரி வித்து வந்தனர்.
திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ், சமீபத்தில் முதல்வரை சந்தித்து, மணிகண்டன் மீது அதிக அளவில் புகார்களை தெரிவித்து, நடவடிக்கை எடுக்க வலியுறுத்| தியிருந்தார். துணை முதல்வர் பன்னீர் செல்வத்திடமும் கட்சி நிர்வாகிகள் பலர் மணிகண்டன் மீது புகார் அளித்துள்ளனர்.
மேலும், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவியை கேட்டு முதல்வரிடம் மணிகண்டன் வலியுறுத்தி வந்ததாக கூறப் படுகிறது. ஆனால், அந்தப் பதவியை உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு அளித்ததால், மணிகண்டன் அதிருப் தியில் இருந்துள்ளார். அதன்கார ணமாகவே உடுமலை ராதாகிருஷ் ணன் மீது குற்றச்சாட்டுகளை தெரி வித்து பேட்டி அளித்தார்.
ஏற்கெனவே புகார்கள் குவிந் திருந்த நிலையில், மணிகண்டனின் இந்தப் பேட்டியும் இணைந்து அவரது அமைச்சர் பதவியை பறித்து வுிட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மணிகண்டன் மீதான நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த அமைச் சர் டி.ஜெயக்குமார், ‘‘அவரை எதற்காக நீக்கினார்கள் என்பது தெரி யாது. அது முதல்வரின் அதி காரத்துக்குட்பட்ட விஷயம்’’ என்றார்.