

சென்னை
காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இரா.அன்பரசு சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 79.
உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அடுத்த காட்டுப்பாக்கத்தில் உள்ள வீட்டில் இரா.அன்பரசு ஓய்வெடுத்து வந் தார். இந்த நிலையில், நேற்று பிற்பகல் 3 மணி அளவில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதை யடுத்து, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப் பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித் தும் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட் டத்தில் 1940-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி பிறந்த இரா.அன்பரசு, இளம் வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இளைஞர் காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர், துணைத் தலைவர், செங்கல்பட்டு மாவட்ட காங்கிரஸ் செயலாளர், காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் செயலாளர் என காங்கிரஸில் பல முக்கிய பொறுப்புகளை வகித் தவர்.
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 1980 (செங்கல்பட்டு), 1989, 1991 (மத்திய சென்னை) என 3 முறை இருந்தவர். முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் நன்மதிப்பை பெற்றவர். அன்பரசுவின் மனைவி கமலா ஏற்கெனவே காலமாகிவிட் டார். முன்னாள் எம்எல்ஏவான அருள் அன்பரசு என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர்.
அன்பரசுவின் உடல் அவரது காட்டுப்பாக்கம் இல்லத் தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள் ளது. இன்று இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று அவரது மகன் அருள் அன்பரசு தெரிவித்தார்.
இரா.அன்பரசு மறைவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.