Published : 09 Aug 2019 07:53 AM
Last Updated : 09 Aug 2019 07:53 AM

பருப்பு கொள்முதல் ஊழல் தொடர்பாக அறிக்கை: பாமக நிறுவனர் ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து

சென்னை

பருப்பு கொள்முதல் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அறிக்கை வெளியிட்டதற்காக பாமக நிறுவனர் ராமதாஸ் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘‘தமிழகத்தில் நடைபெறும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு கொள்முதல் செய்வதில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, இது தொடர்பாக வெளிப் படையாக விசாரணை நடத்தினால் பருப்பு கொள்முதல் ஊழல் வெளிச்சத்துக்கு வரும்’’ என பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த 2014-ம் ஆண்டு அறிக்கை வெளியிட்டார்.

இதையடுத்து தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் சார்பில் ராமதாஸ் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ராமதாஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடந்தது மனுதாரர் தரப்பில் வழக் கறிஞர் கே.பாலு ஆஜராகி வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதி, சாதாரணமாக அறிக்கை வெளியிட்டதற்கெல்லாம் தமிழக அரசு நிதியையும், நேரத்தையும் செலவழித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்வதா என கண்டனம் தெரிவித்து, இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x