2025-ம் ஆண்டில் இ-காமர்ஸ் துறையில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும்: சென்னையில் நடந்த சில்லறை விற்பனையாளர் மாநாட்டில் தகவல்

சென்னை சில்லறை விற்பனையாளர் சங்க மாநாட்டில், சில்லறை விற்பனையில் நீடித்த வளர்ச்சிக்கான புதிய உத்திகள் என்ற தலைப்பில் நடைபெற்ற குழு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து) சங்கீதா மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் எல்.சுபாஷ் சந்திரா, விவேக் நிறுவன இணை நிர்வாக இயக்குநர் பி.ஏ.சீனிவாசன், இந்திய விற்பனையாளர் சங்க விற்பனை பிரிவு இயக்குநர் ஹிதேஷ் பட், நட்ஸ் அண்ட் ஸ்பைசஸ் நிறுவனர் சுனில் சங்லேச்சா, ஹஸ்புரோ கிளாத்திங் நிறுவனர் சுஹைல் சத்தார், நல்லி குழுமத்தின் துணை தலைவர் லாவண்யா நல்லி. படம்: க.பரத்
சென்னை சில்லறை விற்பனையாளர் சங்க மாநாட்டில், சில்லறை விற்பனையில் நீடித்த வளர்ச்சிக்கான புதிய உத்திகள் என்ற தலைப்பில் நடைபெற்ற குழு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து) சங்கீதா மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் எல்.சுபாஷ் சந்திரா, விவேக் நிறுவன இணை நிர்வாக இயக்குநர் பி.ஏ.சீனிவாசன், இந்திய விற்பனையாளர் சங்க விற்பனை பிரிவு இயக்குநர் ஹிதேஷ் பட், நட்ஸ் அண்ட் ஸ்பைசஸ் நிறுவனர் சுனில் சங்லேச்சா, ஹஸ்புரோ கிளாத்திங் நிறுவனர் சுஹைல் சத்தார், நல்லி குழுமத்தின் துணை தலைவர் லாவண்யா நல்லி. படம்: க.பரத்
Updated on
2 min read

சென்னை

இ-காமர்ஸ் துறையில் 2025-ம் ஆண்டில் இந்தியா 3-வது இடத் தில் இருக்கும் என்று சென் னையில் நடந்த சில்லறை விற்பனை யாளர் மாநாட்டில் தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்திய சில்லறை விற்பனையாளர் சங்கம் சார்பில் சென்னை சில்லறை விற்பனையாளர் மாநாடு கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நேற்று நடந்தது. ‘சில்லறை விற்பனையில் நீடித்த வளர்ச்சிக்கான புதிய உத்திகள்’ என்ற கருத்தை மையப்படுத்தி நடந்த இந்த மாநாட்டில், சில்லறை விற்பனையில் முன்னணியில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதில் இந்திய சில்லறை விற் பனையாளர் சங்கத் தலைவரும், ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனத்தின் தலைவருமான பி.எஸ்.நாகேஷ் சிறப்புரை ஆற்றினார்

அவர் பேசும்போது, ‘‘அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் நடந்து வரும் இன்றைய காலகட்டத்தில், சில்லறை விற்பனைத் துறையும் பல் வேறு சவால்களை எதிர்நோக்கி யுள்ளது. பொருளாதார வளர்ச்சி யில் ஏற்ற, இறக்கங்கள் இருந்து வருகின்றன. அதேநேரம், இத் துறையில் பல புதிய வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. புதிய வாய்ப்புகளை சில்லறை விற்பனையாளர்கள் நன்கு பயன் படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

தொடர்ந்து பல்வேறு நிறுவனங் களின் நிர்வாகிகள் தங்கள் தொழில் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். எஸ்ஏபி நிறுவனத்தின் விற்பனை மேலாளர் கே.ஜி.வினய் பேசும்போது, ‘‘இ-காமர்ஸ் துறையில் 2025-ல் இந்தியா 3-வது இடத்தில் இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளனர். அதேபோல, 2020-ல் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராகவும், 2030-ல் 10 டிரில்லியன் டாலராக வும் இருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது’’ என்றார்.

‘சந்தை புரட்சி - வர்த்தக மாற்றம்’ என்ற தலைப்பில் ஏபிஆர் குழும நிர்வாக துணை தலைவர் (விற்பனை) சாய்நாத் ராஜகோபால் பேசினார்.

இதைத் தொடர்ந்து, ‘சில்லறை விற்பனையில் நீடித்த வளர்ச்சிக் கான புதிய உத்திகள்’ என்ற தலைப்பில் குழு விவாதம் நடந்தது. இதில், விவேக் நிறுவன இணை நிர்வாக இயக்குநர் பி.ஏ.சீனிவாசன், சங்கீதா மொபைல்ஸ் நிர்வாக இயக்குநர் சுபாஷ் சந்திரா, நல்லி குழும துணை தலைவர் லாவண்யா நல்லி உள்ளிட்டோர் பேசினர்.

பிற்பகலில் நடந்த நிகழ்ச்சியில் இதயம் ஆயில் தலைவர் வி.ஆர். முத்து, ஆச்சி மசாலா தலைவர் பத்மசிங் ஐசக், மன்னா ஃபுட் புராடக்ட்ஸ் நிறுவனர் நாசர் உள் ளிட்டோர் சிறப்புரை வழங்கினர்.

முன்னதாக, இந்திய சில் லறை விற்பனையாளர் சங்க தென் மண்டலக் குழு தலைவர் சுஹைல் சத்தார் வரவேற்றார். அமைப்பின் விற்பனை பிரிவு இயக்குநர் ஹிதேஷ் பட் அறிமுகவுரை ஆற் றினார்.

இரவு நடந்த நிகழ்ச்சியில் எலெக் ட்ரானிக்ஸ், மளிகை, செல்போன், ஜுவல்லரி, மால், உணவு சேவை உள்ளிட்ட சில்லறை விற்பனையில் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த நிறுவனங்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. எஸ்ஏபி, மார்க்கெட் ஆஃப் இந்தியா, ‘இந்து தமிழ்’ நாளிதழ், எச்டிஎப்சி வங்கி உள்பட பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in