Published : 09 Aug 2019 07:41 AM
Last Updated : 09 Aug 2019 07:41 AM

தலித்கள் முன்னேற்றத்துக்கு பாடுபட்ட சாதனையாளர்கள்: ‘இந்து’ என்.ராம், விஐடி விசுவநாதன் உள்ளிட்ட 6 பேருக்கு விசிக சார்பில் விருது

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், விருதுகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் (இடமிருந்து) நாகப்பன், பீட்டர் அல்போன்ஸ், ‘இந்து’ என்.ராம், விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு தொல்.திருமாவளவன் விருதுகளை வழங்கினார். படம்: ம.பிரபு

சென்னை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் 'இந்து' என்.ராம், வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் உள் ளிட்ட 6 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

விசிக சார்பில் தலித்கள் முன் னேற்றத்துக்குப் பாடுபடும் சாதனை யாளர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கவுரவிக்கப் படுகிறது.

சென்னை தேனாம்பேட்டை காம ராஜர் அரங்கத்தில் நேற்று நடை பெற்ற விழாவில் ‘அம்பேத்கர் சுடர்' விருது ‘இந்து’ என்.ராம், ‘பெரியார் ஒளி' விருது ஜி.விசுவ நாதன், ‘காமராஜர் கதிர்' விருது காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், ‘அயோத்திதாசன் ஆதவன்' விருது சமூக செயற் பாட்டாளர் மா.நாகப்பன், ‘காயிதே மில்லத் பிறை' விருது வரலாற்று ஆய்வாளர் செ.திவான், ‘செம் மொழி ஞாயிறு' விருது தொழில திபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

விருதுகளை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வழங் கினார். விருதுடன் ரூ. 50 ஆயிரம் காசோலையும் வழங்கப்பட்டது.

பின்னர் திருமாவளவன் பேசியதாவது:

அவரவர் துறைகளில் உச்சம் தொட்டவர்கள் விசிக அளித்த விருதுகளைப் பெற்று நம்மை பெருமைப்படுத்தியுள்ளனர். ஒருவரது பிறப்பு, நட்பு, தேவை அடிப்படையில் விருதாளர்கள் தேர்வு செய்யப்படவில்லை. தலித் கள் மேம்பாட்டுக்காக சிறப்பாக பங்களிப்பு செய்ததன் அடிப்படை யில் தேர்வு செய்யப்பட்டனர்.

விசிகவை பொது நீரோட்டத்தில் இணைப்பது ஜாதி ஒழிப்பு போராட்டத்தின் முதல்படி. பொது நீரோட்டத்தில் இணைந்தால் விசிகவின் அடிப்படை கொள்கை களில் இருந்து ஒருபோதும் விலக மாட்டோம். காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை வரலாற்று உண்மை அறியாத வர்கள் வேண்டுமானால் கொண் டாடலாம். வரலாறு தெரிந்தவர்கள் கொண்டாட முடியாது.

அரசியலமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவுக்கு எதிராக அம் பேத்கர் எதுவும் கூறவில்லை. பவுத் தர்கள் அதிகம் வசிக்கும் லடாக், இந்துக்கள் அதிகம் வசிக்கும் ஜம்மு, முஸ்லிம்கள் அதிகம் வசிக் கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு என்று காஷ்மீரை மூன்றாகப் பிரிக்கலாம் என்று அப்போதே அம்பேத்கர் கூறினார். முஸ்லிம்கள் பெரும் பான்மையாக உள்ள காஷ்மீரை இணைக்க பொது வாக்கெடுப்பு நடத்தலாம்; இல்லையெனில் பிற்காலத்தில் பிரச்சினை வரும் என்றுதான் அம்பேத்கர் கூறினார்.

காஷ்மீர் மக்களுக்கு நேரு அளித்த வாக்குறுதிக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல் பட்டுள்ளது. இதனைக் கண்டித்து விசிக சார்பில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும். இவ் வாறு திருமாவளவன் பேசினார்.

அம்பேத்கர் சுடர் விருது பெற்ற ‘இந்து’ என்.ராம் பேசியதாவது:

அம்பேத்கர் சுடர் விருது பெறு வதில் பெருமை கொள்கிறேன். அம்பேத்கரின் வாழ்க்கை, படிப்பு, போராட்டம், வெற்றி, தோல்வி ஆகியவற்றை தெரிந்து கொள் வதில் எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்து வந்தது. கொலம் பியா பல்கலைக்கழகம் சென்ற போதுதான் அவரது பெருமை தெரிந்தது.

ஜாதி ஒழிப்பு, தீண்டாமை கொடுமை போன்றவற்றை எதிர்ப் பதில் அம்பேத்கர் சமரசம் செய்து கொண்டதே இல்லை. அரசியல் ஜனநாயகத்தை, சமூக ஜனநாயக மாக மாற்றவில்லை என்றால் பயனில்லை என்றார். அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் இருந்த தலைவர் களைவிட அவரது புகழ்தான் மேலோங்கி உள்ளது. ஏனென்றால் கோடிக்கணக்கான மக்கள் அவ ரது கருத்துகளின் பின்னால் இருக் கிறார்கள். அவரைப் போன்ற அறிவுஜீவியைப் பார்க்க முடியாது.

இளைஞர்களை ஈர்க்கக் கூடிய தலைவர்களைப் பார்ப்பது தற் போது அபூர்வமாக உள்ளது. எண் ணற்ற இளைஞர்களைக் கொண்ட இயக்கமாக விசிக உள்ளது. திரு மாவளவன் இளைஞர்களை ஈர்க்கும் தலைவராக இருக்கிறார்.

இவ்வாறு என்.ராம் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x