கனமழையால் வெள்ளக்காடாக மாறியது நீலகிரி; நிவாரண முகாம்களில் 10 கிராம மக்கள்: பவானி ஆற்றில் 62,000 கனஅடி நீர் வெளியேற்றம்; மீட்புப் பணியில் பேரிடர் குழு

கூடலூரை அடுத்த பாக்கனா பகுதியில் தண்ணீரில் மிதக்கும் குடியிருப்புகள்.
கூடலூரை அடுத்த பாக்கனா பகுதியில் தண்ணீரில் மிதக்கும் குடியிருப்புகள்.
Updated on
2 min read

உதகை

கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதை அடுத்து, உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் பகுதி பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்களுக்கு விடு முறை அறிவிக்கப்பட்டது. உதகை - மஞ்சூர் சாலையில் 10-க்கும் மேற் பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததாலும், இத்தலார், எம ரால்டு சாலையில் மண் சரிவாலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முதியவர் உயிரிழப்பு

உதகை அருகே இத்தலார் வினோபாஜி பகுதியில் தடுப்புச் சுவர் இடிந்து வீட்டின் மீது விழுந்ததில் சென்னி (70) என்பவர் உயிரிழந்தார். கூடலூர், பந்தலூர் பகுதிகளில் குடி யிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்த தால், 10-க்கும் மேற்பட்ட கிராம மக் கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கூடலூர் அருகே கோத்தர்வயல், தேன்வயல், பாக்கனா, இருவயல், மொளப் பள்ளி பகுதிகளில் உள்ள குடி யிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்த தால், மக்கள் வெளியேற்றப்பட்டு பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர்.

அவலாஞ்சி மின் நிலையத்தின் முன்புறம் மற்றும் பின்புறம் உள்ள மலையில் மண் சரிவு ஏற்பட்டு, மரங் கள் வெள்ளத்தில் அடித்துவரப்பட் டன. அவற்றை அகற்றும் பணியில், மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். உதகை - கூடலூர் சாலை அனுமாபு ரம் அருகே சாலையோரத்தில் மண் சரிவு ஏற்பட்டது. சீரமைப்புப் பணி யில், நெடுஞ்சாலைத் துறை பணி யாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள் மேற்கொள்ள 80 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர், கோவையில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இக்குழுவி னர் கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட உள்ளனர். பேரிடர் பாதிப்பு களை உடனுக்குடன் தெரிவிக்க 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி யுள்ளது. எனினும், ஒரு வாரமாக இந்த தொலைபேசி எண் செயல்படா மல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

82 செ.மீ. மழையா?

உதகை மத்திய மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு நிறுவன முதன்மை விஞ்ஞானி எஸ்.மணிவண்ணன் கூறும்போது, ‘தென்மேற்கு பருவ மழைக் காலத்தில் நீலகிரி மாவட் டத்தில் பதிவாகும் மொத்த மழை அளவு, கடந்த ஒரு வாரத்தில் பதி வாகிவிட்டது. வரலாறு காணாத அளவாக அவலாஞ்சியில் ஒரே நாளில் 82 செ.மீ. மழை பதிவாகியுள் ளது' என்றார். எனினும், அவலாஞ்சி யில் 82 செ.மீ. மழைப் பதிவானதா என்பது குறித்து சந்தேகம் நிலவு வதால் மழைமானியை ஆய்வு செய்ய புணேவில் இருந்து நிபுணர் கள் வர உள்ளனர்.

பவானி ஆற்றில் வெள்ளம்

நீலகிரியில் பெய்து வரும் கன மழை காரணமாக, கோவை மாவட் டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணை நிரம்பியது.

இதனால், அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 62,000 கனஅடி நீரும் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகி றது. இதன் காரணமாக 4-வது நாளாக கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை தொடர்கிறது.

நெல்லை, குமரியில் பலத்த மழை

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்றுமுன் தினம் விடியவிடிய பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணை நேற்று ஒரே நாளில் 12 அடியும், சேர்வலாறு அணை 28 அடியும், மணிமுத்தாறு அணை 4 அடியும் நீர்மட்டம் உயர்ந்தது. பாப நாசத்தில் 110 மி.மீ. மழை கொட்டி யதால், அணைக்கு 8,881 கனஅடி தண்ணீர் வருகிறது. குற்றாலத்தில் பிராதன அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

குமரி மாவட்டத்தில் அதிகபட்ச மாக பாலமோரில் 86 மிமீ மழை பதிவானது. பேச்சிப்பாறை அணை யில் நேற்று ஒரே நாளில் 6 அடியும், பெருஞ்சாணி அணையில் 9 அடியும் நீர்மட்டம் உயர்ந்தது. குமரி மாவட் டத்தில் உள்ள பொதுப்பணித் துறை யின் 2,040 குளங்களும் கடும் சூறைக் காற்று மற்றும் கடல் சீற்றத்தால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் நேற்று கடலுக்குச் செல்லவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in