நெல்லை மாவட்டத்தில் கனமழை; சேர்வலாறு அணை நீ்ர்மட்டம் ஒரே நாளில் 28 அடி உயர்வு; குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு

நெல்லை மாவட்டத்தில் கனமழை; சேர்வலாறு அணை நீ்ர்மட்டம் ஒரே நாளில் 28 அடி உயர்வு; குற்றாலத்தில் வெள்ளப் பெருக்கு
Updated on
1 min read

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இன்று 2- வது நாளாக பிரதான அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. நிலைமையை போலீஸார் தீவிரமாக கண்காணித்து, வெள்ளம் குறைவாக இருக்கும்போது மட்டும் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதித்தனர்.

நெல்லை மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கன மழை காரணமாக நேற்று 65 அடியாக இருந்த பாபநாசம் அணை, ஒரே நாளில் 12 அடி உயர்ந்து தற்போது 77 அடியாகவும், சேர்வலாறு அணை நேற்று 80 அடியாக இருந்த நிலையில் 28 அடி உயர்ந்து 108 அடியாகவும் உயர்ந்துள்ளது. மணிமுத்தாறு அணை ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 54 அடியாக உள்ளது

நெல்லை மாவட்ட மழை அளவு (08-08-19)
பாபநாசம்: 110 மி.மீ
சேர்வலாறு: 47 மி.மீ
மணிமுத்தாறு:22.49 மி.மீ
கடனா நதி:20 மி.மீ
ராமா நதி:20 மி.மீ
கருப்பா நதி:28 மி.மீ
குண்டாறு:51 மி.மீ
நம்பியாறு:20 மி.மீ
கொடுமுடியாறு:75 மி.மீ
அடவிநயினார்:55 மி.மீ
அம்பாசமுத்திரம்:37.60 மி.மீ
ஆய்குடி:2.80 மி.மீ
சேரன்மகாதேவி:9 மி.மீ
நாங்குநேரி:28.20 மி.மீ
பாளையங்கோட்டை:3.40 மி.மீ
ராதாபுரம்:66.20 மி.மீ
சங்கரன்கோவில்:1 மி.மீ
செங்கோட்டை:39 மி.மீ
சிவகிரி:1 மி.மீ
தென்காசி:18.30 மி.மீ
நெல்லை:1.50 மி.மீ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in