Published : 08 Aug 2019 08:09 AM
Last Updated : 08 Aug 2019 08:09 AM

விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்டங்களின் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை: திருச்சி,  நிலக்கோட்டையில் உறவினர்கள் வீட்டிலும் ஆய்வு

விழுப்புரம்/திருச்சி/திண்டுக்கல்

விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன் வீட்டில் நேற்று காலை முதல் மாலை வரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற் கொண்டனர். இதேபோன்று, அவரது தந்தை மற்றும் உறவினர் வீடுகளிலும் சோதனை நடைபெற் றது. இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக போலீஸார் கூறினர்.

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குந ராக பணியாற்றி வருபவர் மகேந்திரன். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியை பூர்வீக மாக கொண்ட இவர், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுக ளாக பணியாற்றி வருகிறார்.

இவர் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் செயல்படுத்தப்படும் சாலைப் பணிகள், பொதுக் கழிப் பறை திட்டம், அரசுக் கட்டிடங்கள் கட்டும் பணி, குடிநீர் திட்டப் பணிகள் போன்ற பணிகளை நிறைவேற்ற ஒப்பந்ததாரர்கள், ஊராட்சிகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் என அனைத்து பணிகளுக்கான ஆவணங்களில் கையெழுத்திட லஞ்சம் கேட்பதாக சென்னை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு பல தரப்பினரிடம் இருந்தும் புகார்கள் அனுப்பப்பட்டன.

இதைத் தொடர்ந்து நேற்று விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான 8 போலீஸார் மகேந்திரன் வீட்டுக்கு சென்றனர். அப்போது வீட்டில் இருந்து வெளியே புறப்பட ஆயத்த மான பெண் ஒருவரிடம் விசாரணை நடத்தினர். அவர், புதுகோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி என்றும், காஞ்சிபுரம் அத்திவரதரை காணச் செல்லும் வழியில் மகேந்திரனை மரியாதை நிமித்தமாக பார்க்க வந்ததாகவும் தெரிவித்தார்.

உடனே இத்தகவலை சென்னை யில் உள்ள இயக்குநர் அலுவல கத்துக்கு போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இயக்குநர் அலுவலக உத்தரவின்படி திட்ட இயக்குநர் மாலதியை ஜீப்பில் அழைத்துக் கொண்டு 2 போலீஸார் புதுக்கோட்டைக்கு புறப்பட்டு சென்றனர்.

இதனைத் தொடர்ந்து மகேந்தி ரன் வீட்டில் காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 5 மணி வரை நீடித்தது. இதில் பல் வேறு ஆவணங்களை போலீஸார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

கோப்புகளை பதுக்கிய ஊழியர்கள்

திட்ட இயக்குநர் வீட்டில் சோதனை என்பதை அறிந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலக ஊழியர்கள் தங்களின் கட்டுப்பாட் டில் உள்ள கோப்புகளை அவசர அவசரமாக தங்களின் உறவினர் கள் வீடுகளில் பதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த போலீஸார் அவர்களிடமும் விசா ரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும், திட்ட இயக்குநர் வீட்டில் சோதனை என்பதை அறிந்து, அவரது அலுவலகத்தில் அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளில் பெரும்பாலானோர் ஆய்வுக்கு செல் வதாக அலுவலகத்துக்கு தகவல் அனுப்பிவிட்டு வெளியே சென்ற தால் அலுவலகம் வெறிச்சோடியது.

தந்தை, மாமனார் வீட்டில் ஆய்வு

திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை அருகே அக்ரஹாரப் பட்டியில் உள்ள மகேந்திரனின் தந்தை வெள்ளைச்சாமி வீட்டில் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., நாகராஜ் தலைமையில் போலீஸார் சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவரது தந்தை மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதேபோன்று, திருச்சி திரு வானைக்காவலில் உள்ள மகேந் திரனின் மாமனாரும் ஓய்வுபெற்ற மாவட்ட பதிவாளருமான பனையடி யான் வீட்டிலும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீ ஸார் நேற்று சோதனை நடத்தினர். காலை 10 மணி முதல் 4 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது.

புதுக்கோட்டை அதிகாரி வீட்டில்..

இதற்கிடையே, புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதியை அழைத் துக் கொண்டு புதுக்கோட்டை வந்த போலீஸார், அவரது வீட்டில் சோதனை நடத்தினர். நேற்று இரவு வரை சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x