மேகேதாட்டு அணை விவகாரம்: மத்திய அரசின் முடிவுக்கு டெல்டா விவசாயிகள் வரவேற்பு

மேகேதாட்டு அணை விவகாரம்: மத்திய அரசின் முடிவுக்கு டெல்டா விவசாயிகள் வரவேற்பு
Updated on
1 min read

தஞ்சாவூர்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு வில் அணை கட்டுவதற்காக ஆய்வு நடத்த கர்நாடகாவுக்கு சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி மறுத் துள்ளதை காவிரி டெல்டா விவ சாயிகள் வரவேற்றுள்ளனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகே தாட்டுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு, அதற் கான விரிவான திட்ட அறிக் கைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச் சகத்தில் விண்ணப்பித்தது. இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும், தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி, மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என கேட்டுக்கொண்டார்.

ஆனால், கர்நாடக மாநில புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற எடியூரப்பா, நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசியபோது, மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி கேட்டதற்கு பிரதமர் எவ்வித பதிலும் அளிக்க வில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மேகேதாட்டு வில் அணை கட்ட ஆய்வு செய் வதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நேற்று முன்தினம் மறுத்துவிட்டது. இது, காவிரி டெல்டா விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையை டெல்டா மாவட்ட விவசாயிகள் பலரும் வரவேற்றுள்ளனர்.

காவிரிப் பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்க தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன்: மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் அறி விப்பை வரவேற்கிறோம். அதே நேரத்தில் பிரதமருக்கு விவசாயி கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். டெல்டாவில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களால் மத்திய அரசு மீது அதிருப்தியில் இருந்த விவசாயிகளுக்கு இது சற்று ஆறுதலான அறிவிப்பு.

அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்க தஞ்சாவூர் மாவட்டத் துணைத் தலைவர் வெ.ஜீவகுமார்: அணை கட்ட ஆய்வு மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை வரவேற் கிறோம். அதே சமயம், காவிரி பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

நசுவினி ஆற்றுப் படுகை அணை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வீரசேனன்: ஆய்வுக்கு அனுமதி அளிக்காதது காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும்.

அத்துடன் கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது என்பதால், மீண்டும் மறைமுகமாக கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கக் கூடாது, அத்தகைய செயலில் மத்திய அரசு ஈடுபடாது என நம்புகிறோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in