பி.எட். படிப்புக்கான நேரடி கலந்தாய்வு தொடங்கியது; மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் சாதகமான அம்சங்களை மட்டும் ஏற்போம்: உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் உறுதி

பிஎட் படிப்புக்கான நேரடி கலந்தாய்வு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத் தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டனர்.படம்: பு.க.பிரவீன்
பிஎட் படிப்புக்கான நேரடி கலந்தாய்வு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத் தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் சிறப்பு பிரிவு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டனர்.படம்: பு.க.பிரவீன்
Updated on
1 min read

சென்னை

புதிய கல்விக் கொள்கையில் தமிழகத்துக்கு சாதகமான அம்சங்களை மட்டும் ஏற்றுக் கொள்வோம். பாதகமானவற்றை தொடர்ந்து எதிர்ப்போம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் 2,040 இடங்கள் உள்ளன. நடப்பு ஆண்டில் 3,800 மாணவ - மாணவிகள் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கலந்தாய்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண் கடந்த திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. கலந்தாய்வு ஆகஸ்ட் 7 முதல் 13-ம் தேதி வரை (12-ம் தேதி நீங்கலாக) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நேற்று கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு காலையில் நடந்தது.

ஒவ்வொரு பிரிவிலும் தரவரிசையில் முதல் 5 இடங்களைப் பிடித்த 10 மாணவ - மாணவிகளுக்கு உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது, உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் மங்கட்ராம் சர்மா, கல்லூரி கல்வி இயக்குநர் சி.ஜோதி வெங்கடேஸ்வரன், தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை செயலாளரும், லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத் தின் முதல்வருமான எம்.எஸ்.தில்லை நாயகி ஆகியோர் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதிய கல்விக் கொள்கை தொடர் பாக ஆலோசனைக் கூட்டம் டெல்லி யில் வியாழக்கிழமை (இன்று) நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழக உயர்கல்வித் துறை செய லாளர் மங்கட் ராம் சர்மா கலந்து கொள்கிறார். புதிய கல்விக் கொள்கையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை பொறுத்தவரை யில், தமிழகத்துக்கு சாதகமான அம்சங்களை மட்டும் ஏற்றுக் கொள் வோம். பாதகமான அம்சங்களை தொடர்ந்து எதிர்ப்போம். அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதல் வர் நியமனம் தொடர்பாக நீதிமன் றத்தில் வழக்குகள் உள்ளன. வழக்கு முடிவடைந்ததும் விரை வில் அனைத்து கல்லூரிகளுக்கும் நிரந்தர முதல்வர்கள் நியமிக்கப் படுவர்.

தனியார் பொறியியல் கல்லூரி களில் படிக்கும் எஸ்சி, எஸ்டி மாண வர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக கல்வி உதவித்தொகை வழங்கப் படவில்லை என்று வெளியாகியுள்ள தகவல் தவறு. கடந்த ஓராண்டுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப் படவில்லை. அந்த தொகையையும் விரைந்து வழங்க ஆதிதிராவிட நலத் துறை தேவையான நடவடிக் கைகளை எடுத்துவருகிறது.

இவ்வாறு அமைச்சர் அன்பழ கன் கூறினார்.

நேற்று பிற்பகல் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் அதைத்தொடர்ந்து, பொறியியல் பட்டதாரிகளுக்கும் கலந்தாய்வு நடைபெற்றது. 2-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) தமிழ், ஆங்கிலம், மனையியல், பொருளாதாரம், வணிகவியல் ஆகிய பாடப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in