Published : 08 Aug 2019 07:21 AM
Last Updated : 08 Aug 2019 07:21 AM

காஞ்சியில் ஆக. 13, 14, 16-ம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; அத்திவரதர் வைபவ பணிகளில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு 

சென்னை

அத்திவரதர் வைபவத்தில் பாது காப்பு உள்ளிட்ட பணியில் ஈடுபட் டுள்ள ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறி வித்துள்ளார். பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் காஞ்சி புரத்தில் உள்ள பள்ளி, கல்லூரி களுக்கு வரும் 13, 14, 16-ம் தேதி களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் வைபவம் நடந்து வருகிறது. அனந்தசரஸ் குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை, பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கிய இந்த விழா, வரும் 17-ம் தேதி வரை நடக்கிறது. ஜூலை 31 வரை சயனக் கோலத்தில் காட்சி அளித்த அத்திவரதர், ஆக.1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 2 நிலைகளிலும் தரிசித் தால் அதிக பலன் உண்டு என்ற நம்பிக்கையில், சயனக் கோலத்தை தரிசித்த பக்தர்கள், மீண்டும் நின்ற கோலத்தை தரிசிக்க வருகின்றனர்.

இதனால், தற்போது தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சி புரத்தில் குவிந்து வருகின்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 8 லட்சம் பேர் வந்ததாக கூறப்படு கிறது. பக்தர்கள் 20 மணி நேரத் துக்கும் அதிகமாக வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து வருகின்றனர்.

இன்னும் 10 நாட்களே இந்த வைபவம் நடக்கும் என்பதால் இனி வரும் நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அங்கு பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் கூடுதல் வசதிகள் மற்றும் பாது காப்பு ஏற்பாடுகளை செய்வது குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்ப தால், மாவட்ட நிர்வாகம் இது வரை மேற்கொண்டு வரும் ஏற்பாடு கள் குறித்தும், கூடுதல் வசதிகள், பாதுகாப்பு குறித்தும் துறை வாரி யாக கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது.

அதைத் தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி வெளியிட்ட உத்தரவுகள்:

காஞ்சிபுரத்துக்கு அதிகமான வாகனங்களும், மக்கள் கூட்டமும் வருவதால் கூடுதல் வாகனங்களை பள்ளி, கல்லூரி வளாகங்களில் நிறுத்தவும், அப்பகுதியில் பக்தர்கள் ஓய்வெடுத்துச் செல்ல வசதிகளும் ஏற்படுத்தித் தரவேண்டும். வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளி கள் அமர்ந்து செல்ல கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும். தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்த, கூடுதல் துப்புரவுப் பணியாளர்களை சென்னை மாநகராட்சியில் இருந்து அனுப்ப வேண்டும்.

செலவை ஈடுசெய்ய நிதி

பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க, கூடுதல் காவலர்களை நியமிக்க வேண்டும். பக்தர்களுக்கு உணவு, குடிநீர் போன்றவற்றை சுகாதாரத்துடன் வழங்குவதை கண்காணிக்க வேண்டும். அத்தி வரதர் வைபவத்தில் பாதுகாப்பு, துப்புரவு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்ததை கருத்தில்கொண்டு காஞ்சிபுரம் நகராட்சிக்கு ஏற்பட்ட செலவை ஈடுசெய்ய தமிழக அரசு சிறப்பு நிதி வழங்கும்.

பக்தர்கள் அதிக அளவில் காஞ்சிபுரம் நகரத்துக்கு தொடர்ந்து வருவதால் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்கும் வகையில் ஆக.13, 14 மற்றும் 16 ஆகிய நாட்களில் காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் பிற அலுவலர்கள் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

ஆய்வுக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனி வாசன், கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழ கன், சி.விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், சேவூர் எஸ்.ராமச் சந்திரன், தலைமைச் செயலர் கே.சண்முகம், உள்துறைச் செய லர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி ஜே.கே.திரிபாதி, அறநிலையத் துறை செயலர் அபூர்வ வர்மா, வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால், அறநிலையத் துறை ஆணையர் பணீந்திர ரெட்டி, காஞ்சிபுரம் ஆட்சியர் பி.பொன் னையா உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x