Published : 08 Aug 2019 07:09 AM
Last Updated : 08 Aug 2019 07:09 AM

22 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி, அம்ருத் திட்டப்பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவு 

சென்னை

தமிழகத்தில் ரூ.21,996 கோடியே 7 லட்சம் மதிப்பில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி, அம்ருத் திட்டப்பணி களை உரிய காலவரையறைக்கும் முடிக்க வேண்டும் என்று அதி காரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் செயல்படுத்தப் பட்டு வரும் சீர்மிகு நகரம் (ஸ்மார்ட் சிட்டி), அடல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றத் துக்கான (அம்ருத்) திட்டங்கள் குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு செய்தார். பின்னர் இது குறித்து அவர் கூறியதாவது:

சீர்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, தஞ்சை, சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்கடி, நெல்லை, திருச்சி, ஈரோடு ஆகிய 11 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒவ்வொரு நகரத்துக்கும் ரூ.500 கோடி நிதியுதவி வழங்குகிறது. மத்திய அரசுக்கு இணையாக தமிழக அரசும் ரூ.500 கோடி நிதியுதவி அளிக்கிறது.

தமிழகத்தில் தேர்வு செய்யப் பட்ட 11 சீர்மிகு நகரங்களில் மொத் தம் ரூ.10,554 கோடியே 75 லட்சம் மதிப்பில் 358 திட்டங்கள் அனு மதிக்கப்பட்டுள்ளன. இதில் ரூ.198 கோடியில் 54 திட்டங்கள் முடிக்கப் பட்டுள்ளன. ரூ.5,352 கோடி மதிப்பிலான 184 திட்டங்களின் பணிகள் நடந்து வரு கின்றன. ரூ.605 கோடியே 20 லட்சம் மதிப்பில் 13 திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் ஆய்வு செய் யப்பட்டு வருகின்றன. ரூ.439 கோடியிலான 18 திட்டங்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப் பட்டுள்ளன. ரூ.625 கோடியில் 15 திட்டங்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட வேண்டும். ரூ.651 கோடி யில் 4 திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கையானது ஆய்வு நிலையில் உள்ளது. ரூ.2,684 கோடியில் 70 திட்டங்களுக்கான விரி வான திட்ட அறிக்கை தயாரிக்கப் பட்டு வருகிறது. இந்திய அளவில் சீர்மிகு நகர திட்ட செயலாக்கத்தில் தமிழகம் 7-ம் இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் சென்னை பெரு நகர மாநகராட்சி, வேளாங்கண்ணி பேரூராட்சி உட்பட 28 உள்ளாட்சி அமைப்புகளில் அம்ருத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குடிநீர், கழிவுநீர் வசதி மற்றும் கழிவுநீர் கசடு அகற்றும் மேலாண்மை, மழை நீர் வடிகால் வசதி, நகர போக்கு வரத்து வசதிகளை ஏற்படுத்துதல், பசுமை மற்றும் திறந்தவெளி பகுதி கள் ஏற்படுத்துதல் போன்றவற்றை உறுதி செய்வது இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் ரூ.11,441 கோடியே 32 லட்சம் மதிப்பிலான 445 திட்டங்கள் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டங்களில் 411 திட்டங் கள் ரூ.306 கோடியில் முடிக்கப் பட்டுள்ளன. ரூ.8,625 கோடி மதிப் பிலான 30 திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. ரூ.2,246 கோடி மதிப்பிலான 3 பெரிய திட்டங்கள் ஒப்பந்த புள்ளி நிலையில் உள்ளன. ரூ.264 கோடியே 12 லட்சம் மதிப் பிலான பாதாளசாக்கடை திட்டப் பணி மறு ஒப்பந்தப்புள்ளி நிலையில் உள்ளது. இந்திய அளவில் அம்ருத் திட்ட செயலாக்கத்தில் தமிழ கம் 13-வது இடத்தில் உள்ளது.

மேலும் அனைத்து திட்டங்களுக் கும் செப். 30-க்குள் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட வேண்டும் என்றும் நிலுவையில் உள்ள திட்டங்களுக்கு திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை விரைவாக முடித்து, அக். 1-க்குள் ஒப்பந்தப்புள்ளிகள் கோரவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. பணிகளை அமல் படுத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் குறித்து உடனுக்குடன் நகராட்சி நிர்வாக ஆணையர் கவனத்துக்கு கொண்டுவர வேண் டும். திட்டம் அறிவித்த நாளில் இருந்து 5 ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட வேண்டும் என அதி காரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ஹர்மந் தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணை யர் டி.கார்த்திகேயன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயககுநர் ஹரிஹரன் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x