இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்: சென்னையில் நடந்த விழாவில் முதல்வர் பழனிசாமி புகழாரம்

சென்னையில் நேற்று நடைபெற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை விழாவில், ‘கொள்கை மாற்றத்துக்கு அறக்கட்டளை கொடுத்த அழுத்தம்’ குறித்த நூலை வெளியிடுகிறார் முதல்வர் பழனிசாமி. உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'இந்து' என்.ராம், அறக்கட்டளை நிறுவனர் எம்.எஸ்.சுவாமிநாதன், அறக்கட்டளை தலைவர் மதுரா சுவாமிநாதன், செயல் இயக்குநர் அ.அனில்குமார், உலக சுகாதார நிறுவன துணை தலைமை இயக்குநர் சவுமியா சுவாமிநாதன். படம்: பு.க.பிரவீன்
சென்னையில் நேற்று நடைபெற்ற எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை விழாவில், ‘கொள்கை மாற்றத்துக்கு அறக்கட்டளை கொடுத்த அழுத்தம்’ குறித்த நூலை வெளியிடுகிறார் முதல்வர் பழனிசாமி. உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 'இந்து' என்.ராம், அறக்கட்டளை நிறுவனர் எம்.எஸ்.சுவாமிநாதன், அறக்கட்டளை தலைவர் மதுரா சுவாமிநாதன், செயல் இயக்குநர் அ.அனில்குமார், உலக சுகாதார நிறுவன துணை தலைமை இயக்குநர் சவுமியா சுவாமிநாதன். படம்: பு.க.பிரவீன்
Updated on
2 min read

சென்னை

தனது வாழ்நாளை வேளாண் முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்த வர் எம்.எஸ்.சுவாமிநாதன் என்று முதல்வர் பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் 30-வது ஆண்டு விழா சென்னை தரமணியில் நேற்று நடைபெற்றது. அதில் தொடக்க உரையாற்றிய ‘இந்து’ என்.ராம், ‘‘எம்.எஸ்.சுவாமி நாதனின் சேவையை பாராட்டி, அவரது தலைமை அலுவலகத்தை பெங்களூரில் அமைக்க தேவை யான நிலத்தை வழங்குவதாக கர் நாடக அரசு அறிவித்தது. ஆனால் அவர் சென்னையில்தான் தனது தலைமை அலுவலகத்தை நிறுவி னார். அதன் குத்தகை காலத்தை மேலும் நீட்டிக்க விண்ணப்பிக்கப் பட்டுள்ளது. அதை மேலும் 99 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்" என்றார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் பேசும் போது, "தமிழகத்தில்தான் நீண்ட நெடிய கடற்கரை உள்ளது. சதுப்பு நிலக் காடுகளும் உள்ளன. அதனால் ஆராய்ச்சிக்கு ஏற்ற இடமாக கருதி தமிழகத்தில் தலைமையகத்தை நிறுவினேன்’’ என்றார்.

விழாவில் முதல்வர் பழனிசாமி, அறக்கட்டளையின் ஆண்டறிக்கை, கொள்கை அறிக்கைகளை வெளி யிட்டு பேசியதாவது: உலகம் போற் றும் வேளாண் விஞ்ஞானியாக திகழும் எம்.எஸ்.சுவாமிநாதன், தமி ழகத்தைச் சேர்ந்தவர். 1942-ஆம் ஆண்டு வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சம் இவரை பாதித்ததால், இந் தியா உணவு உற்பத்தியில் தன் னிறைவு பெற தனது வாழ்நாளை வேளாண்மை முன்னேற்றத்துக் காக அர்ப்பணித்தார். இவரது ஆராய்ச்சியால் உயர் விளைச்சல் பயிர் ரகங்கள் கண்டறியப்பட்டு, உணவு உற்பத்தியில் பின்தங்கி இருந்த இந்தியா, தன்னிறைவு பெற்று ஒரு பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியது.

வெளிநாட்டில் இருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்த நிலைமை முற்றிலும் மாறி, தன் னிறைவு நிலையை இந்தியா அடைந்ததன் காரணமாகத்தான், அவர் ‘பசுமைப் புரட்சியின் தந்தை’ என்றும் அழைக்கப்படுகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் 1 லட்சத்து 62 ஆயிரம் ஹெக்டேர் நிலங்கள் வளப்படுத்தப்பட்டுள்ளன.

குத்தகை காலம் நீட்டிப்பு

சதுப்பு நிலக் காடுகள் மீட்கப் பட்டுள்ளன. 4 ஆயிரம் சத்துணவு பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டுள் ளன. தமிழக அரசும் வேளாண் உற்பத்தியை இருமடங்காக்கி, விவசாயிகள் வருமானத்தை மும் மடங்காக்கிடும் நோக்கத்தில் 2-ம் பசுமை புரட்சியை ஏற்படுத்திட முனைப்புடன் செயல்பட்டு வரு கிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் அறக் கட்டளையின் குத்தகை காலம் நீட்டிப்பது தொடர்பாக அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவாக நீட்டித்து கொடுக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

முன்னதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அறக்கட்டளை யின் 30 ஆண்டு கால ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த நூலை வெளியிட்டு பேசும்போது, ‘‘இந்நிறுவனம், பருவநிலை மாற் றத்தை சமாளிக்க தொலைநோக்கு சிந்தனையுடன் ஆய்வு மேற் கொண்டு வருகிறது. மீனவர் உள்ளிட்ட சமுதாயங்களின் வாழ்வா தாரத்தை உயர்த்த இந்நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை செய்து வந்துள்ளது. சிறுதானிய சாகுபடி யையும் ஊக்குவித்து வருகிறது’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் அறக்கட்டளை யின் தலைவர் மதுரா சுவாமிநாதன், செயல் இயக்குநர் ந.அனில்குமார், உலக சுகாதார நிறுவனத்தின் துணை தலைமை இயக்குநர் சவுமியா சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in