

மதுரை
தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் நீக்கப்பட்டார். முதல்வர் பழனிசாமியால் முதன்முதலாக நீக்கப்பட்ட அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத் துறையை கூடுதல் பொறுப்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி. உதயகுமாரிடம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து எம்எல்ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த மாவட்டத்தின் ஒரே அமைச்சராக இருந்தார்.
இந்நிலையில், பரமக்குடியில் நேற்று நடந்த அரசு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மணிகண்டன், தமிழகத்தில் கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்பட்டது குறித்து முதல்வர் பழனிச்சாமி என்னிடம் கலந்தாலோசிக்கவில்லை. இதனால், அரசுக்கு மாதம் ரூ.27 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், கேபிள் டிவி தலைவராக நியமிக்கப் பட்டுள்ள கால்நடைத் துறை அமைச்சர் உடு மலை ராதாகிருஷ்ணன் மீது செட்ஆப் பாக்ஸ் மாற்றம் தொடர்பாகவும், தனியாக கேபிள் டிவி நடத்தி வருவதாகவும் சில குற்றச்சாட்டு களைக் கூறியிருந்தார்.
தன்னிடம் இருந்த கேபிள் டிவி நிர்வாகத்தைப் பிரித்து உடு மலை ராதாகிருஷ்ணனை நிய மித்ததால் அமைச்சர் மணி கண்டன் கடும் அதிருப்தியில் இருந்தார்.
மணிகண்டனின் பேச்சு கட்சித் தலைமைக்கும், முதல்வருக் கும் உடனடியாக தெரிவிக்கப்பட் டது. இதன் தொடர்ச்சியாக அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நேற்றிரவு சுமார் 9.45 மணி அளவில் நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
முதல்வரின் பரிந்துரையின்பேரில் ஆளு நர் பன்வாரிலால் புரோஹித் இந்த அறிவிப்பை நேற்றிரவு வெளியிட்டார்.
மணிகண்டனிடமிருந்து பறிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறையை, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மரணத்துக்குப் பின் முதல் வராகப் பொறுப்பேற்ற பழனிசாமியின் அமைச் சரவையில் இருந்து முதல்முறையாக நீக்கப் பட்டவர் மணிகண்டன் என்பது குறிப்பிடத் தக்கது.
கேபிள் டிவி நிர்வாகப் பொறுப்பு தன்னிட மிருந்து பறிக்கப்பட்டது முதலே முதல்வருடன் மணிகண்டன் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.