Published : 29 Jul 2015 21:34 pm

Updated : 29 Jul 2015 22:37 pm

 

Published : 29 Jul 2015 09:34 PM
Last Updated : 29 Jul 2015 10:37 PM

டாஸ்மாக் கடைகள் வியாழக்கிழமை விடுமுறை: அரசு அறிவிப்பு

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு நடைபெறுவதை முன்னிட்டு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுக்கடைகளுக்கு தமிழக அரசு நாளை விடுமுறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அரசாணையில், ‘‘அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள் நடைபெறுவதை முன்னிட்டு ஜூலை 30-ம் தேதி தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அன்றைய தினம் டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுக்கடைகள், மது அருந்தும் கூடங்கள் மூடப்பட்டிருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா பிறப்பித்துள்ளார்.





அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

டாஸ்மாக்விடுமுறைகலாம் இறுதிச்சடங்குதமிழக அரசுஅறிவிப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author