Published : 07 Aug 2019 11:10 AM
Last Updated : 07 Aug 2019 11:10 AM

பிரசவத்தில் இளம்பெண் உயிரிழப்பு; மருத்துவமனை முற்றுகை: மாம்பாக்கத்தில் உறவினர்கள் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு

ஆரணி/ஆற்காடு

பிரசவத்தில் இளம்பெண் உயிரிழந்ததாக கூறி ஆரணி அரசு மருத்துவமனையை உறவினர்கள் நேற்று முற்றுகையிட்டனர்.

வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த இருங்கூர் கிராமத்தில் வசிப்பவர் அரிவிழி வேந்தன். இவரது மனைவி ஜமுனா(29). நிறைமாத கர்ப்பிணியான ஜமுனா மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்படவே, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்க்கப் பட்டது. இதில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அப்போது தொப்புள் கொடி வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டு, ரத்தப் போக்கு அதிகரித்து, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டாக கூறப்படுகிறது. இதை யடுத்து, வேலூர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்க பரிந் துரைக்கப்பட்டுள்ளார். அதன்படி அவர், 108 ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல் லாமல், முதலுதவி சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, ஜமுனாவை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஆரணி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல றிந்த ஆரணி நகர காவல் துறை யினர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்தை நடத்தினர்.

அப்போது காவல் துறையினரி டம் உறவினர்கள் கூறும்போது, “மாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜமுனாவுக்கு செவி லியர்கள் பிரசவம் பார்த்ததாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதும் வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரைத் தனர். அப்போது அங்கிருந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர் தாமாக முன்வந்து சிகிச்சை அளித் துள்ளார். அப்போது ரத்தப்போக்கு அதிகம் ஏற்பட்டதால் ஜமுனா உயிரிழந்துள்ளார்.

எனவே, அவரது உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்தனர். இதனையேற்று, உறவினர்கள் முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையில், மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர், செவிலியர் மற்றும் ஆம்புலன்ஸ் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாம்பாக்கம் கூட்டுச்சாலை சந்திப்பில் ஜமுனாவின் உறவினர்கள் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில் கலவை காவல் நிலைய ஆய்வாளர் நிர்மலா மற்றும் காவல் துறையினர் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். நீண்ட நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மருத்துவர் சுரேஷிடம் கேட்டதற்கு, ‘‘30 படுக்கை கொண்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு பணியில் மருத்துவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். பணியில் இருக்கும் செவிலியர்தான் பிரசவம் பார்ப்பார்கள்.

பிரசவசத்தில் சிக்கல் இருப்பது தெரியவந்தால் உடனடியாக மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து விடுவார்கள். இது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.

செவிலியர் இடமாற்றம்

மாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கெனவே கர்ப்பத்தை கலைத்துள்ளனர். இந்தத் தகவலை அவர்கள் மருத்துவர்களிடம் மறைத்துள் ளனர். இந்தத் தகவல் முன்கூட்டியே தெரிந்திருந்தால் அவரை பிரசவத்துக்கு அனுமதித்தபோதே அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்திருக்க முடியும். இளம் பெண் உயிரிழந்த பிரச்சினையில் மெத்தனமாக செயல்பட்டதாக செவிலியர் திவ்யா என்பவரை இடமாற்றம் செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x