ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு தாய்ப்பால் தானம் வழங்கிய 199 தாய்மார்கள்

குளிர்ப்பதன பெட்டியில் பாதுகாக்கப்படும் தாய்ப் பால்.
குளிர்ப்பதன பெட்டியில் பாதுகாக்கப்படும் தாய்ப் பால்.
Updated on
1 min read

கி.தனபாலன்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை ‘தாய்ப்பால் வங்கிக்கு’ கடந்த ஓராண்டில் 199 தாய்மார்களே தாய்ப்பாலை தானமாக வழங்கி உள்ளனர். இந்த எண்ணிக்கையை அதிகரிக்க கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை உணர்த்த ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது.

இந்த 7 நாட்களில் தாய்ப்பாலின் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப் படுகின்றன.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 18.5.2018-ல் ‘தாய்ப்பால் வங்கி’ தொடங்கப்பட்டது. இங்கு 6 மாதம் வரை தாய்ப்பாலை பாதுகாக்கும் வசதி உள்ளது. இதுவரை 199 தாய்மார்கள் தாய்ப்பாலை வழங்கி உள்ளனர். அவர்கள் வழங்கும் தாய்ப்பாலை நவீன இயந்திரம் மூலம் தூய்மைப்படுத்தி, ஆய்வகத் துக்கு அனுப்பி கிருமிகள் உள்ளதா எனப் பரிசோதிக்கின்றனர். இதில் சுகாதாரமானது எனத் தெரிந்த பிறகே வங்கியில் பாதுகாத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு வழங்குகின்றனர்.

கடந்த ஓராண்டில் பிற மாவட்ட மருத்துவமனை தாய்ப்பால் வங்கிகளில் 1,000, 2,000 தாய்மார்கள் தாய்ப்பாலை தானமாக வழங்கியபோதும், ராமநாதபுரம் மருத்துவமனையில் கடந்த ஓராண்டில் 199 தாய் மார்களே தாய்ப்பாலை வழங்கி யுள்ளனர். அதனால் இன்னும் தாய்மார்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இதுகுறித்து மருத்துவ இணை இயக்குநர் சகாய ஸ்டீபன் ராஜிடம் கேட்டபோது, தாய்ப்பால் தானமாக கொடுப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. நிறைய பேர் தாய்ப்பால் தானமாக வழங்க கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in