Published : 07 Aug 2019 10:33 AM
Last Updated : 07 Aug 2019 10:33 AM

பக்தர்கள் தரிசனம் செய்ய வசதியாக அத்திவரதர் இருப்பிடம் மாற்றப்படுமா?- 37-ம் நாளில் வெண்பட்டாடையில் அருள்பாலித்தார்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத் தில் 37-ம் நாள் நிகழ்வில் வெண் பட்டாடை அணிந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அவரை வழக்கம் போல் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 4 லட்சம் பக்தர்கள் திரண்டனர். இதனால் காஞ்சிபுரம் பகுதியில் பல்வேறு இடங்களில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆனால், நேற்று காலையில் கூட்டம் கொஞ்சம் குறைந்த நிலையில் காணப்பட்டது. நண்பக லுக்கு மேல் மக்கள் கூட்டம் மீண்டும் அதிகரித்தது. நகரில் சுமார் 3 லட்சம் பேர் கூடினர். பொது தரிசனத்தில் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். முக்கிய பிரமுகர்கள் செல்லும் பாதையில் காலையில் 1 மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் வரை ஆனது.

நின்ற கோலத்தில் காட்சி அளிக் கும் அத்திவரதரை காண்பதற் காக தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. பொதுமக் கள் தங்கிச் செல்வதற்காக அமைக்கப்பட்ட இடமும் நிரம்பி வழிவதால் டி.கே.நம்பி தெருவில் மக்களை நிறுத்தி வைத்து போலீஸார் அனுப்புகின்றனர்.

இதனால் அந்தப் பகுதியில் முற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வரதராஜ பெருமாள் கோயிலுக்கு இயக்கப் படும் பேருந்துகள் காந்தி சாலை யுடன் நிறுத்தப்பட்டுள்ளன. வாலா ஜாபாத், கீழம்பி, ஒலிமுகமது பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இடம் மாற்றப்படுமா?

நாளுக்கு நாள் கூட்டம் அதி கரித்து வருகிறது. வரும் நாள்களி லும் கூட்டம் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எனவே குறுகிய வழியுடைய வசந்த மண்டபத்தில் அத்திவர தரை தொடர்ந்து வைத்திருந்தால் கூட்டம் அதிகரிக்கும்போது நெரி சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

வரதராஜ பெருமாள் கோயி லுக்கு உள்ளேயே மக்கள் கூட்ட மாக பார்த்துவிட்டுச் செல்லும்படி யான விரிவான இடத்தில் வைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதன் மூலம் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தடுக்க முடியும். எவ்வளவு பக்தர் கள் கூட்டம் வந்தாலும் எளிதில் பார்த்துவிட்டு வெளியேறுவார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் வலி யுறுத்துகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x