Published : 07 Aug 2019 09:42 AM
Last Updated : 07 Aug 2019 09:42 AM

இரட்டைக் கொலை நடைபெற்ற முதலைப்பட்டியில் குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்றி கரை அமைக்கும் பணி தொடக்கம்:  மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் ஆய்வு

கரூர்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே முதலைப்பட்டி குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரை அமைக்கும் பணி தொடங்கியது. பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர் ஆகி யோர் ஆய்வு செய்தனர்.

முதலைப்பட்டி குளம் ஆக்கிர மிப்பு தொடர்பாக பொதுநல வழக்கு தொடர்ந்த வீரமலை(70), அவரது மகன் நல்லதம்பி(44) ஆகியோர் கடந்த ஜூலை 29-ம் தேதி கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து பொதுநலன் வழக்காக விசாரணைக்கு எடுத் துக்கொண்டு விசாரணை நடத்தி யது.

குளத்தின் மொத்தப் பரப் பளவில் எவ்வளவு நிலம் ஆக்கிர மிப்பில் உள்ளது என்பது உள் ளிட்ட விவரங்களை வருவாய் அலுவலர்கள் ஆக.14-ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தர விட்டனர்.

இதையடுத்து, முதலைப்பட்டி குளத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் வரப்பு அமைத்து விவசாயம் செய்து வந்த பகுதிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், குளித் தலை கோட்டாட்சியர் எம்.லியாகத் உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த 3-ம் தேதி ஆய்வு செய்தனர்.

39 ஏக்கர் மீட்பு

இந்நிலையில், முதலைப்பட்டி குளத்தின் பரப்பளவில் 39 ஏக்கரை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வயல்களின் வரப்புகளை இடித்து அகற்றும் பணி நேற்று தொடங்கி யது. இப்பணியில் 5 பொக்லைன் கள், 2 லாரிகள், 2 டிராக்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன. வரப்பு மண்ணை அள்ளி கரை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில், 3 ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டிருந்த வய லில் இருந்த வாழை மரங்களும் அழிக்கப்பட்டன.

இப்பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், கோட்டாட்சியர் எம்.லியாகத் ஆகி யோர் பார்வையிட்டு ஆய்வு செய்த னர். குளித்தலை வட்டாட்சியர் செந்தில், காவல் இன்ஸ்பெக் டர்(பொ) முகமது இத்ரிஸ் ஆகி யோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து மாவட்ட வரு வாய் அலுவலர் கூறியபோது, “முதலைப்பட்டி குளத்தில் 39 ஏக்கரில் உள்ள ஆக்கிரமிப்பு வயல்களின் வரப்புகளை அகற்றி கரை அமைக்கும் பணி ரூ.5 லட்சம் பொதுநிதியைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வரத்து வாய்க்கால்களைக் கண்டறிவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x