Published : 07 Aug 2019 09:19 AM
Last Updated : 07 Aug 2019 09:19 AM

இந்திய அரசியலில் யாராலும் மறக்க முடியாத தனித்துவம் மிக்க தலைவர் கருணாநிதி: ‘ஒரு மனிதன் ஒரு இயக்கம்’ நூல் வெளியீட்டு விழாவில் என்.ராம் புகழாரம்

‘தி இந்து’ குழுமத்தின் 'பிரண்ட்லைன்' ஆங்கில இதழ் தயாரித்துள்ள 'ஒரு மனிதன், ஒரு இயக்கம்' என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடைபெற்றது. ’இந்து' என்.ராம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நூலை வெளியிட, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். உடன் ‘பிரண்ட்லைன்' ஆசிரியர் ஆர்.விஜயசங்கர். படம்: ம.பிரபு

சென்னை

இந்திய அரசியலில் யாரும் மறக்க முடியாத, தனித்துவம் மிக்க தலைவராக கருணாநிதி திகழ்ந்தார் என்று 'தி இந்து' வெளியீட்டு குழுமத்தின் தலைவர் என்.ராம் புகழாரம் சூட்டினார்.

'பிரண்ட்லைன்' மாதமிருமுறை ஆங்கில இதழ் தயாரித்துள்ள 'ஒரு மனிதன், ஒரு இயக்கம்' என்ற நூல் வெளியீட்டு விழா, சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்றிரவு நடைபெற்றது. 'தி இந்து' வெளியீட்டு குழுமத்தின் தலைவர் என்.ராம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நூலை வெளியிட, திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி முதல் பிரதி யைப் பெற்றுக்கொண்டார். 'பிரண்ட் லைன்' ஆசிரியர் ஆர்.விஜயசங்கர் வரவேற்புரையாற்றினார். பத்திரி கையாளர் ராதாகிருஷ்ணன் நிகழ்ச் சியை தொகுத்து வழங்கினார்.

விழாவில் என்.ராம் பேசிய தாவது:

கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி திமுக தலைவராக இருந்த கருணா நிதி மறைந்தபோது 'பிரண்ட்லைன்' ஒரு சிறப்பிதழை வெளியிட்டது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரு சாமானியர் எப்படி பெரும் தலைவராக உயர்ந்தார் என்பதை ஆதாரங்களுடன் விளக்கும் பல் வேறு கட்டுரைகள், செய்திகள் வெளியாகி இருந்தன. பத்திரிகை யாளர்கள், அரசியல், வரலாற்று ஆய்வாளர்கள், கருணாநிதியுடன் நெருங்கிப் பழகியவர்கள் என பலரும் எழுதிய இந்தத் தொகுப்பு, நாடு முழுவதும் பெரும் வர வேற்பைப் பெற்றது. அந்த சிறப்பிதழ்தான் இப்போது தமிழில் ‘ஒரு மனிதன் ஒரு இயக்கம்' என்ற நூலாக வெளிவந்துள்ளது.

இந்திய அரசியலில் எத்த னையோ தலைவர்கள் இருந்துள்ள னர். சாதனை படைத்துள்ளனர். அவர்களில் யாரும் மறுக்க முடி யாத, மறக்க முடியாத தனித்துவம் மிக்க தலைவர் கருணாநிதி. சிறு வயதிலேயே கையெழுத்து இதழ், அச்சு இதழ், நாடகம், திரைத்துறை மூலம் சமூக நீதி, மொழி உரிமை, சுயமரியாதை, மதச்சார்பின்மை, ஜனநாயகம் போன்ற தனது இயக்கத்தின் கொள்கைகளை பரப்பி எழுச்சியை ஏற்படுத்தியவர்.

பன்முக திறன் வாய்ந்தவர்

அரசியல் தலைவராக மட்டு மின்றி இலக்கியவாதி, பத்திரிகை யாளர், பேச்சாளர், சமூக சிந்தனை யாளர் என பன்முக ஆளுமைத் திறன் கொண்டவர் கருணாநிதி. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பத்திரிகையாளர்கள், மாற்று கட்சி யினர் என அனைத்துத் தரப்பின ரும் அவரை எளிதில் அணுக முடியும். விவாதிக்க முடியும். இதுபோன்ற ஒரு தலைவரை எனது அனுபவத்தில் பார்த்ததில்லை.

மாநில சுயாட்சி முழக்கத்தை முதலில் எழுப்பியவர். இந்திய அளவில் காங்கிரஸின் செல்வாக்கு குறைந்தபோது கூட்டணி அரசுகள் அமைப்பதில் கருணாநிதி முக்கியப் பங்காற்றினார். அது வரலாற்றில் அழியாத பக்கங்களாக உள்ளன. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, சமூக ஏற்றத் தாழ்வுகளால் பாதிக்கப்பட்டு வந்தவர் என்பதால் அவர் முதல்வராக இருந்தபோது ஒரு சமூக நல அரசை நடத்தி னார்.

விவசாயம், தொழில், பொது மருத்துவம், கல்வி என அனைத் துத் துறைகளிலும் தமிழகம் முன்ன ணியில் இருப்பதற்கு கருணாநிதி முக்கியப் பங்காற்றியுள்ளார். ஒரு மனிதனாக இருந்து இயக்கமாக மாறிய அவரது சாதனைகள் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

இவ்வாறு என்.ராம் பேசினார்.

விழாவில் பேசிய கி.வீரமணி, ‘‘கருணாநிதி பற்றி நாங்கள் எத்தனையோ நூல்கள் வெளியிட் டுள்ளோம். ஆனால், 125 ஆண்டு களை கடந்த பாரம்பரியம் மிக்க ‘தி இந்து’ குழுமம் அவரைப் பற்றிய தொகுப்பு நூலை வெளியிடுவது சிறப்புமிக்கது. சிறுவனாக இருக்கும்போது ஜாதிய வேறுபாடுகளால் அவமானத்தை சந்தித்த கருணாநிதி, அதை களைய ஒரு அறுவை சிகிச்சையாளராக மாறினார்.

அவரது வாழ்க்கை வரலாறு, சாதனைகளை இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். மாநில சுயாட்சிக்கு பெரும் ஆபத்து நேர்ந்துள்ள இந்தத் தருணத்தில் இப்படியொரு நூல் வெளியாகி இருப்பது பாராட்டத்தக்கது’’ என் றார்.

‘ஒரு மனிதன் ஒரு இயக்கம்’ நூல் வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்து திமுக தலை வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய வாழ்த்து கடிதத்தை மாநிலங் களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வாசித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x