

சென்னை
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டிருப்பது அர சியல் சாசனத்தின் மீதும், ஜன நாயகத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.
நாட்டின் முதல் பிரதமர் நேரு வின் ராஜதந்திர நடவடிக்கை களால்தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. அவர் அளித்த வாக்குறுதியால் இந்தியாவின் ஒரு பகுதியாக இன்றும் காஷ்மீர் உள்ளது. இல்லையெனில் காஷ்மீர் பாகிஸ்தான் வசம் சென்றிருக்கும்.
இதை சீர்குலைக்கும் வகை யிலும் நேரு அளித்த வாக் குறுதியை மீறும் வகையிலும் காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, சிறப்பு அந்தஸ்தைப் பறித்துள்ளது மத்திய பாஜக அரசு. இது இந்திய இறையாண்மைக்கும், கலாச்சாரத்துக்கும் எதிரானது.
கொடுத்த வாக்குறுதியைக் காப் பாற்றுவதுதான் இந்தியர்களின் பண்பாடு. அதை பாஜக அரசு தகர்த்துள்ளது. மதம், சாதியின் பெயரில் நாட்டைப் பிரிக்கும் முயற்சியில் பிரதமர் மோடி இறங்கி யுள்ளார். இது மிகவும் ஆபத்தானது. கடும் கண்டனத்துக்குரியது.
ஹிட்லர், முசோலினி போன்ற சர்வாதிகாரிகள் போல மோடி செயல்படுகிறார். இந்தியாவின் வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறார். இது கண்டிப்பாக தோல்வியில் முடியும். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைக் கண் டித்து கூட்டணிக் கட்சிகள், மதச் சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராட்டங்களை நடத்த இருக்கிறோம். இது தொடர்பாக ஆலோசிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளோம்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் மாநிலத்துக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும். இதை தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் முன்வைக்கும். இவ் வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.
பேட்டியின்போது மூத்த தலை வர் குமரிஅனந்தன், மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஆ.கோபண்ணா, எஸ்சி பிரிவு மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, மாநிலப் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, மாவட்டத் தலைவர்கள் சிவராஜ சேகரன், எம்.எஸ்.திரவியம் உள்ளிட் டோர் உடன் இருந்தனர்.காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைக் கண்டித்து கூட்டணிக் கட்சிகள், மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளுடன் இணைந்து போராட்டங்களை நடத்த இருக்கிறோம்.