Published : 07 Aug 2019 09:11 AM
Last Updated : 07 Aug 2019 09:11 AM

மீன் விற்பனைக்கு புதிய செயலி: விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டம்

சென்னை

மீன் விற்பனைக்கு புதிய செயலி யை அறிமுகப்படுத்த மீன்வளத் துறை முடிவு செய்துள்ளது.

வாடிக்கையாளர்கள் ஆன் லைன் மூலம் பதிவு செய்து மீன் களை வாங்குவதற்காக www.meengal.com என்ற இணையதளம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீன்வளத் துறையின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. வீடுகளில் இருந்தபடியே சிலர் இணையதளத்தில் பதிவு செய்து மீன்களை வாங்கி வருகின்றனர்.

இவ்வாறு, மாதந்தோறும் ரூ.2 லட்சம் மதிப்பிலான மீன்கள் இணையதளம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆன்லைன் மூலம் மீன் விற்பனையை அதி கரிக்க புதிய செயலியைத் தொடங்க மீன்வளத் துறை அதி காரிகள் முடிவு செய்துள்ளனர். இதன் அடிப்படையில் தனியார் நிறுவனத்தின் மூலம் புதிய செயலி உருவாக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதுதொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறியதா வது: மீன்களை வாங்க இணைய தளத்தை வழக்கமான வாடிக்கை யாளர்கள்தான் பயன்படுத்தி வரு கின்றனர். புதிய வாடிக்கையாளர் களையும் கவரும் வகையில் இணையதளத்தை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின் றன. இது ஒருபுறமிருக்க, இணைய தளத்துக்குச் சென்று முன்பதிவு செய்வதைக் காட்டிலும் செல்போனில் செயலி இருந்தால் வாடிக்கையாளர்களுக்கு இன்னும் சுலபமாக இருக்கும் என்று தோன்றியது.

எனவே, வாடிக்கையாளர் களின் வசதிக்காக புதிய செயலியை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம். தனியார் நிறுவனத்தின் மூலம் புதிய செயலியை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓரிரு மாதங்களில் இந்தச் செயலியை நடைமுறைக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x