காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: சென்னையில் 200-க்கும் மேற்பட்டோர் கைது

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் தமுமுக பொதுச்செயலாளர் ஹைதர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, சுப வீரபாண்டியன் மற்றும் எஸ்றா சற்குணம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.படம்: ம.பிரபு

Updated on
1 min read

சென்னை

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அர சின் நடவடிக்கையை கண்டித்து சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற பல் வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு கடந்த 5-ம் தேதி சட்டத் திருத்தம் கொண்டுவந்து, காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசி யலமைப்பு சட்டம் 370, பிரிவு 35-ஏ ஆகியவற்றை நீக்கியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், திராவிட இயக்க தமிழர் பேரவை, திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திரா விடர் கழகம், தமிழ்த் தேசிய பேரி யக்கம் உள்ளிட்ட பல்வேறு அரசி யல் கட்சிகள், அமைப்புகள் சென் னையில் நேற்று ஆளுநர் மாளி கையை முற்றுகையிட்டு போராட் டம் நடத்தப் போவதாக கூட்டாக அறிவித்திருந்தன.

அதன்படி, பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் சுமார் 500 பேர் சைதாப்பேட்டை சின்னமலை போக்குவரத்து சிக்னல் அருகே நேற்று காலை 11.30 மணி அள வில் திரண்டனர். திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செய லாளர் ஹைதர் அலி, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செய லாளர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏ, பேராயர் எஸ்றா சற்குணம் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக் குழுவினர் கோஷமிட்டனர். பின்னர் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடச் சென்ற 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in