

கி.மகாராஜன்
மதுரை
நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல விவகாரத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி கள் இருவரை நிர்வாகிகளாக நிய மித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.
நெல்லை சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகக் குழு தேர்தலை எதிர்த் தும், திருமண்டல கல்வி நிறு வனங்கள், மருத்துவமனைகளில் பணியாளர்கள் நியமனம், இடமாறு தல் தொடர்பாக உயர் நீதிமன்றக் கிளையில் 31 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்து நீதிபதி ஆர்.மகாதேவன் நேற்று பிறப்பித்த உத்தரவு:
நெல்லை சிஎஸ்ஐ திருமண் டலம், டிடிடிஏ ஆகியவற்றை நிர் வகிக்கவும், புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பிஷப்/சேர்மன் மற்றும் சிஎஸ்ஐ ஆயரால் நியமிக் கப்பட்ட நிதிக் காப்பாளர் ஆகியோர் இடையே சமரசம் ஏற்படுத்தவும் ஜம்மு-காஷ்மீர் மாநில உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார், சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.ஜோதிமணி ஆகியோர் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் தங்களது பணிக்கு உதவி செய்ய ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகளை நியமிக்க உரிமை வழங்கப்படுகிறது.
நெல்லை திருமண்டலத்துக்கு 23.4.2017-ல் தேர்வு செய்யப்பட்ட திருமண்டல கவுன்சில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகக் குழு தலைவர்/ பேராயர் கிறிஸ்துதாஸ் ஆகியோர் மறு உத்தரவு வரும் வரை உயர் நீதிமன்றம் நியமித்துள்ள இரு நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் பணி புரிய வேண்டும். இவர்கள் 2 வாரங் களில் அனைத்து ஆவணங்களை யும் நிர்வாகிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
நெல்லை திருமண்டலத்தில் 23.4.2017 முதல் நடைபெற்ற இட மாறுதல், பணி நியமனங்கள் தொடர்பான அனைத்து ஆவணங் களையும் நீதிமன்ற நிர்வாகிகளிடம் வழங்க வேண்டும். அந்த நியமனங் கள், இடமாறுதல் தொடர்பாக நிர்வாகிகள் விசாரணை நடத்தி 6 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
அனைத்து நிர்வாகக் குழு கூட்டங்களும் நிர்வாகிகளின் மேற் பார்வையில் நடைபெற வேண்டும். பிரச்சினை ஏற்படும் நிலையில் திருமண்டலத்தின் நலனைக் கருத் தில் கொண்டு நிர்வாகிகள் உரிய முடிவெடுக்க வேண்டும். இதில் நிர்வாகிகளின் முடிவே இறுதியாக இருக்கும்.
திருமண்டலத்துக்குட்பட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் இடமாறுதல், புதிய நியமனங்கள் அனைத்து நிர்வாகக் குழு முன் வைத்து நிர்வாகிகள் மேற்பார் வையில் முடிவெடுக்க வேண்டும். இதில் பிரச்சினை எழுந்தால் நிர் வாகிகளின் முடிவு இறுதியானதாக இருக்கும். இடமாறுதல், நியமனங் களை எதிர்த்து சிலர் நீதிமன்றத் துக்கு வந்துள்ளனர். அவர்கள் 2 வாரங்களில் தங்கள் கோரிக்கை கள் தொடர்பாக நிர்வாகிகளிடம் மனு அளிக்க வேண்டும். அதன் மீது நிர்வாகிகள் விரைவில் முடிவெடுக்க வேண்டும்.
திருமண்டலத்தின் நிதி மற்றும் சொத்துக்களை கையாள்வதில் ஏற்பட்ட பிரச்சினையே முக்கிய காரணம். தற்போது நெல்லை திருமண்டலம், டிடிடிஏ ஆகியவற்றின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் பணிபுரி வோருக்கு அரசிடம் சம்பளம் பெறப்பட்டு கல்வி நிறுவனங் களின் தாளாளர்கள் வழியாக வழங் கப்படுகிறது. இந்த சம்பளத்தை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு நேர டியாக வங்கிக் கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிதி இருப்பு, நன்கொடை வசூல், நிதி நிலைமை கணக்குகளை நிர் வாகிகள் மேற்பார்வையிட வேண் டும். திருமண்டல சொத்து விவரங் கள், கணக்கு, வழக்குகளை நிர்வாகிகள் நியமிக்கும் கணக்குத் தணிக்கையாளர் சரிபார்க்க வேண்டும்.
இந்த ஏற்பாடு ஒரு ஆண்டுக்கு செய்யப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிர்வாகி கள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நீதி மன்றம் நியமித்துள்ள நிர்வாகி களுக்கு திருமண்டல நிர்வாகி கள் ஒத்துழைப்பு வழங்க வேண் டும். இல்லாவிட்டால் அதை நீதிமன் றம் கடுமையாக எடுத்துக்கொள் ளும். இந்த உத்தரவு நிறைவேற் றப்பட்டது தொடர்பாக செப்.30-ல் நீதிமன்றத்தில் நிறைவேறுதல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.