

திருப்பூர்
திருப்பூரில் இருந்து வெளிநாடு களுக்கு கடத்தப்பட இருந்த ரூ.4.5 கோடி மதிப்பிலான செம்மரக் கட்டை பறிமுதல் செய்யப்பட்டது.
வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட அதிக அளவி லான செம்மரங்கள், திருப்பூர் - பல்லடம் சாலையில் பிரபல திரை யரங்கின் அருகே தனியார் சேமிப்பு கிடங்கில் பதுக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தி செல்ல இருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மேற்கண்ட பகுதி யில் 1-ம் தேதி இரவு தொடங்கி 2-ம் தேதி அதிகாலை வரை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் சென்ற சரக்கு லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், மேற்பகுதியில் காய்கறிகளை வைத்து, கீழ்பகுதியில் 2 டன் வரையிலான செம்மரக்கட்டைகள் மறைத்திருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, சரக்கு லாரி யுடன் செம்மரக்கட்டைகளை அதி காரிகள் பறிமுதல் செய்தனர். பிடி பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசார ணையில், அப்பகுதியில் உள்ள குடோனில் 9 டன்னுக்கும் மேல் செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. அவற்றையும் அதி காரிகள் பறிமுதல் செய்தனர்.
11.46 டன் செம்மரக்கட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு லாரி, 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப் பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.4.5 கோடி என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சென்னை மண் ணடியைச் சேர்ந்த ஏ.சையது அப்துல் காசிம் (36), திருவல்லிக் கேணியைச் சேர்ந்த கே.அப்துல் ரகுமான் (39), கொடுங்கையூரைச் சேர்ந்த எஸ்.தமீன் அன்சாரி (36), எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்த வி.கண்ணன் (எ) கார்த்திக் (25), கோவை தெற்கு உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த ஐ.முபாரக் (47), எஸ்.உதுமான் பரூக் (33) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து வருவாய் புல னாய்வு பிரிவு அதிகாரிகள் கூறும் போது, 'கைதானவர்களில் 2 பேருக்கு வன உயிர்கள் கடத்தல் குற்றங்களில் தொடர்புள்ளது. மேலும் சிலரை தேடி வருகிறோம்' என்றனர்.