

சென்னை
அரசு, தனியார் மருத்துவமனைகள் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி மற்றும் மருத்துவக்கழிவு கள் மேலாண்மை விதிகளின் கீழ் அங்கீகாரத்தை உடனடியாக விண் ணப்பித்து பெற வேண்டும் என்று தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வாரியம் வெளி யிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதி கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் 28-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் அறிவிக்கப்பட் டது.
இதன்படி அரசு மருத்துவமனை கள், தனியார் மருத்துவமனைகள், புறநோயாளிகள் பிரிவுகள், கால் நடை மருத்துவமனைகள், விலங் கினங்கள் சோதனைக் கூடங்கள், நோயியல் ஆய்வகங்கள், ரத்த வங்கிகள், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவமனைகள், ஆராயச்சி மற்றும் மருத்துவக்கல்வி நிறுவனங் கள், சுகாதார முகாம்கள், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முகாம்கள், தடுப்பூசி மற்றும் ரத்ததான முகாம்கள், பள்ளிகளின் முதலுதவி அறைகள், தடயவியல் ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் ஆகியவற்றுக்கு இந்த விதிகள் பொருந்தும்.
இந்த மருத்துவக்கழிவுகள் மேலாண்மை விதியின் 10-வது பிரிவின் கீழ் மருத்துவக்கழிவுகளை கையாளும் இந்த அனைத்து மருத்துவ நிறுவனங்களும் படிவம் 2-ல் மாசுகட்டுப்பாட்டு வாரியத் துக்கு விண்ணப்பம் செய்ய வேண் டும். அதன்பின் படிவம் 3-ல் அங்கீ காரம் பெற வேண்டும். அந்த அங்கீகாரத்தின் காலாவதி தேதி, மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்படும் அனுமதி ஆணையு டன் ஒத்திசைவு செய்யப்பட்டு வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ நிறுவனங்களும் தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் நீர் மற்றும் காற்று மாசு தடுப்பு விதிகளின் கீழ், அனுமதியும் மருத் துவக்கழிவு மேலாண்மை விதி களின் கீழ் அங்கீகாரமும் உடனடி யாக விண்ணப்பித்து பெற வேண் டும். படுக்கை வசதி இல்லாத மருத் துவ நிறுவனங்கள் தாமதமின்றி மருத்துவ கழிவு மேலாண்மை விதி கள் 2016-ன் கீழ் காலாவதி இல்லாத அங்கீகாரத்தை பெற வேண்டும்.
மருத்துவக் கழிவு மேலாண்மை விதிகளை ஏற்க தவறியவர்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீட்டுத் தொகையை விதிக்க டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு தமிழ் நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.