

சென்னை
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.352 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.27,680-க்கு விற்கப் பட்டது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவ தால், விற்பனை 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாக நகை வியாபாரிகள் கூறு கின்றனர்.
சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குச் சந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங் களால், தங்கம் விலையில் கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. இதற்கிடையே, தங்கம் இறக் குமதி மீதான வரி உயர்வு, அமெரிக்காவில் பொருளா தார பின்னடைவு உள்ளிட்ட காரணங்களால் இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில், அமெ ரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் சற்று குறைந் ததால், தங்கம் விலை நேற்று மேலும் உயர்ந்தது. சென்னை யில் 22 கேரட் தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.3,416 ஆகவும், ஒரு பவுன் ரூ.27,328 ஆகவும் இருந்தது. நேற்று ஒரே நாளில் கிரா முக்கு ரூ.44 என பவுனுக்கு ரூ.352 உயர்ந்தது. இதன் காரணமாக நேற்று ஒரு கிராம் ரூ.3,460-க்கும், ஒரு பவுன் ரூ.27,680-க்கும் விற்கப் பட்டது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவ தால், புதிய நகைகள் வாங்கு வதில் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் விற் பனையும் பாதிக்கப்பட்டுள் ளது.
இதுகுறித்து சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறிய தாவது:
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவ தால், மக்கள் வாங்கும் திறன் கடந்த ஒரு வாரத்தில் 30 சத வீதம் வரை குறைந்துள்ளது. முகூர்த்த நாட்கள் நெருங்க உள்ள நிலையில், சிலர் பழைய தங்கத்தை விற்று, புதிய நகைகளை வாங்கிச் செல்கின்றனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு பவுன் தங்கம் விலை ரூ.30 ஆயிரத்தை தாண்டி விடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இதற்கிடையே, தங்கம் விலையை கட்டுப்படுத்த, மத் திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள தங்கம் மீதான கூடுதல் இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சரை நேரில் சந் தித்து வலியுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.