

சென்னை
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட் டுள்ளது. சட்டம், ஒழுங்கு நிலை குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் டிஜிபி ஜே.கே.திரிபாதி ஆலோசனை நடத் தினார்.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத் தில் நேற்று அறிவித்தார். இதற்கு சில அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட் டுள்ளது. தீவிரவாத அமைப்புகளை சேர்ந் தவர்கள் தாக்குதல் நடத்தவும் வாய்ப்பு இருப்பதால் முக்கிய இடங்களின் பாது காப்பை பலப்படுத்தவும் மத்திய உள் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழ கம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. முன்அனுமதி இல்லாமல் போராட்டங்கள், ஊர்வலங்கள் போன் றவை நடத்தவும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதை மீறி செயல்படுபவர்களை உடனே கைது செய்யவும் அதிகாரிகள் உத்தரவிட் டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்கள், மத்திய அரசு அலுவலகங்கள், முக்கிய வழிபாட்டுத் தலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத் தப்பட்டுள்ளனர். சென்னை, கோவை, மதுரை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள விமான நிலையங்களிலும் பாது காப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் பயணிகளின் உடமை களை சோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், மோப்ப நாய் உதவியுடன் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் உட்பட தமிழகம் முழுவதும் முக்கிய ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டிஜிபி ஜே.கே.திரிபாதி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் தமிழக நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
பாதுகாப்பை பலப்படுத்தி சிறு அசம் பாவிதம்கூட ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று அனைத்து மண்டல ஐஜிக்கள், சரக டிஜஜிக்கள், மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில் அந்தந்த அலுவலகங்களில் நேற்று சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. உளவுத்துறை தகவல் களை உடனுக்குடன் தெரிவிக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது. அசம்பாவிதங் களை தடுக்க அனைத்து நடவடிக்கை களையும் எடுக்க அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.
பார்சல், தபால்கள் அனுப்ப தடை
மத்திய அஞ்சல் துறையின் மெயில் வர்த்தக வளர்ச்சி மற்றும் செயலாக்கத் துறை சார்பில், அனைத்து வட்ட அஞ்சல்துறை தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. எனவே, அம்மாநிலத்துக்கு கடிதங்கள், பதிவு தபால்கள், பார்சல்கள் உள்ளிட்ட அனைத்து வகையான அஞ்சல்கள் விநியோகம் செய்வது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, மறுஉத்தரவு வரும் வரை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு எந்தவித கடிதங்கள், பதிவு தபால்கள், பார்சல்கள் ஆகியவற்றை ‘புக்கிங்’ செய்ய வேண்டாம்’’ என கூறப்பட்டுள்ளது.