Published : 06 Aug 2019 08:04 AM
Last Updated : 06 Aug 2019 08:04 AM

2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 6 மாதங்களில் தொடங்கும்: சென்னையில் அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல் 

சென்னை 

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் அடுத்த 6 மாதங்களில் தொடங்கும் என தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 2 தடத்தில் தற்போது 45 கிமீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் எண் ணிக்கையை மேலும் அதிகரிக்க எழும்பூர், வடபழனி, கிண்டி உள்ளிட்ட 7 மெட்ரோ ரயில் நிலை யங்களில் இருந்து குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் வகை யில் ஷேர் ஆட்டோ, டாக்ஸிகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நந்தனம் மெட்ரோ ரயில் நிலையத்தில் சீருந்து இணைப்பு (ஷேர் டாக்சி, ஷேர் ஆட்டோ) சேவை மற்றும் பேட்டரி மூலம் வாகனங்களுக்கான சார்ஜர் வசதியை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கிவைத்தார்.

இதேபோல் சென்னை சென்ட்ரல், அரசினர் தோட்டம், எல்ஐசி, ஆயிரம்விளக்கு, டிஎம்எஸ் ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து சீருந்து இணைப்பு வசதியும் இந்த வாகனங்கள் சேவையை மக்கள் பெறும் வகையில் புதிய செயலியும் தொடங் கப்பட்டது. எஞ்சியுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ, டாக்ஸிகள் சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளன.

இதுதொடர்பாக அமைச்சர் எம்.சி.சம்பத் கூறும்போது, ‘‘சென் னையில் பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிப்பதற்காக, மத்திய அரசின் நிறுவனமான எனர்ஜி எபிசியன்சி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து பேட்டரி வாகனங்களுக்கான சார்ஜர் வசதிகள் 26 மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகன நிறுத்துமிடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் தொடக்கமாக தற்போது நந்தனத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜர் மையம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னை யில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் அடுத்த 6 மாதங்களில் தொடங்கப்படும்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால், இயக்குநர்கள் சுஜாதா ஜெயராஜ், திவேதி, எல்.நரசிம்ம பிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x