

சென்னை
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண் டாகப் பிரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை கண்காணிக்க 5 தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ள னர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டம் 370-வது பிரிவு நீக்கப்பட்டு அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக் கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழகத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள், முஸ்லிம் அமைப்பு கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. போராட்டங்க ளுக்கு அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது.
இந்நிலையில தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படா மல் தடுக்கவும், கண்காணிக்கவும் 5 தனி அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர்.
மேற்கு மண்டலம், கோவை, திருப்பூர், சேலம் மாவட்டங் களுக்கு ஏடிஜிபி சங்கர் ஜிவால், மதுரை மாநகர், மதுரை, திண்டுக் கல், ராமநாதபுரம் சரகத்துக்கு ஏடிஜிபி அபய்குமார் சிங், மத்திய மண்டலம், திருச்சி மாநகருக்கு ஏடிஜிபி சைலேஷ்குமார் யாதவ், வடக்கு மண்டலம், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ஏடிஜிபி பி.தாம ரைக்கண்ணன், திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி சரகத் துக்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் நியமிக்கப் படுதாக தமிழக டிஜிபி அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.