

சென்னை
தமிழகத்தில் தொலைத் தொடர் புக்கான கேபிள் பதித்தல், செல் போன் கோபுரங்கள் தொடர்பான விதிகளை அமல்படுத்த, தலைமைச் செயலர் தலைமையில் மாநில தொலைத் தொடர்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்பு வசதிக்காக செல்போன் கோபுரம் அமைத்தல், தரைக்கு கீழே ஃபைபர் ஆப்டி கல் கேபிள் பதித்தல் போன்ற நடவடிக்கைகளை முறைப்படுத் தும் விதமாக, இந்திய தொலைத் தொடர்பு உரிமை விதிகளை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த விதிகள் தொடர்பான அரசாணையை மத்திய அரசு கடந்த 2018 பிப்ரவரி 21-ம் தேதி வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, தமிழகத் தில் இந்த விதிகளை 2019 ஏப்ரலில் அமல்படுத்துமாறும், இதற்காக தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைக்குமாறும் தமிழக அரசுக்கு மத்திய தொலைத் தொடர்பு அமைச்சக செயலாளர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிவுறுத்தினார். தொலைபேசி சேவை வழங்குவோர், செல்போன் கோபுரங்கள் மற்றும் ஃபைபர் ஆப்டிகல் கேபிள் கட்டமைப்பு ஏற்படுத்துபவர்களுடன் அந்த குழுவினர் ஒவ்வொரு காலாண்டி லும் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, தலைமைச் செயலர் தலைமையில் மாநில அளவிலான தொலைத் தொடர்புக் குழு அமைத்து தமிழக அரசு கடந்த மாதம் உத்தரவிட்டுள்ளது.
இதில் நிதி, ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம், வீட்டுவசதி, எரிசக்தி ஆகிய துறைகளின் செயலர்கள், தொலைத் தொடர்பு அமலாக்கம், வளம் மற்றும் கண்காணிப்பு அமைப்பின் (டிஇஆர்எம்) துணை தலைமை இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் செயல்படுவார். தொலை பேசி நிறுவனங்கள், கட்டமைப்பு வழங்கும் நிறுவனங்கள், இதர துறைகளின் அதிகாரிகள் உள் ளிட்டோர் தேவைக்கேற்ப இக்குழுவில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.