ஆகஸ்ட்டில் நடைபெறுவதாக இருந்த ரயில்வே தொழிற்சங்க தேர்தல் தள்ளிவைப்பு

ஆகஸ்ட்டில் நடைபெறுவதாக இருந்த ரயில்வே தொழிற்சங்க தேர்தல் தள்ளிவைப்பு
Updated on
1 min read

சென்னை 

ரயில்வே ஊழியர்களின் தொழிற் சங்க தேர்தல் மறுதேதி அறிவிக் கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள் ளது.

ரயில்வே துறையில் நடத்தப் படும் தொழிற்சங்கத் தேர்தலில் பதிவாகும் மொத்த வாக்குகளில் 30 சதவீதம் பெறும் தொழிற்சங்கம் மட்டுமே ரயில்வே வாரியத்தால் அங்கீகரிக்கப்படும். அங்கீகாரம் வழங்கப்படும் தொழிற் சங் கங்கள் மட்டுமே தொழிலாளர் கள், ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியும்.

அதன்படி, ரயில்வே துறையில் முதல்முறையாக கடந்த 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடந்தது. அதன்பிறகு, 2013-ம் ஆண்டில் 2-வது முறை யாக தேர்தல் நடந்தது.

6 ஆண்டுகளுக்கு பிறகு, 3-வது முறையாக கடந்த ஏப்ரலில் தேர் தல் நடத்தி இருக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் நடைபெற்ற தால், ரயில்வே தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதற்கிடையே, தொழிற்சங்க தேர்தல் ஆகஸ்ட் 28, 29-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நாடுமுழுவதும் ரயில்வேயின் கீழ் உள்ள 17 மண்டலங்களில் பணியாற்றும் 13 லட்சம் ஊழியர்களின் ஆதரவைப் பெற தொழிற்சங்கங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் இத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர் தல் குறித்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ள கருத்துகளை ஆய்வு செய்து முடிவெடுக்க காலஅவகாசம் தேவைப்படு கிறது. எனவே, ஏற்கெனவே, அறி விக்கப்பட்ட தொழிற்சங்க தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in