Published : 05 Aug 2019 10:44 AM
Last Updated : 05 Aug 2019 10:44 AM

நீண்ட விடுமுறையில் மதுரை மாவட்ட வன அலுவலர்; பொறுப்பு அதிகாரியும் வரவில்லை

ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை

மதுரை மாவட்ட வன அலு வலர் நீண்ட விடுமுறையில் சென்றதால் பொறுப்பு அதிகாரியாக நிய மிக்கப்பட்டுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரி முகமது ஷபாப் மதுரைக்கு வருவ தில்லை. அதனால், வனப்பகுதி யில் வன விலங்குகள் வேட்டை அதிகரித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் சோழ வந்தான், உசிலம்பட்டி, மதுரை வன உயிரினச் சரகம், மதுரை சமூக நலக் காடுகள் சரகம், திருமங்கலம் சமூக நலக் காடுகள் சரகம் ஆகியவை உள்ளன. இந்த வனச்சரகப் பகுதிகளில் அழகர் மலை, நாகமலை, யானைமலை, கொட்டாம்பட்டி மலை ஆகிய சிறுசிறு மலைகள் உள்ளன.

இங்கு அடர்ந்த வனப்பகுதிகள் இல்லாததால் மக்களை அச்சு றுத்தும் சிறுத்தை, புலி, யானை போன்ற பெரிய வனவிலங்குகள் இல்லை.

மான், காட்டுப் பன்றிகள், குரங்குகள், முயல்கள் உள்ளிட்ட சிறுசிறு வன விலங்குகளும், பறவைகளும் காணப்படுகின்றன. மற்ற மாவட்டங்களைவிட மதுரை யில் மயில்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மழையி ல்லாததால் மதுரையில் உள்ள இந்த சிறுசிறு காடுகள் வறட்சிக்கு இலக்காகி விட்டன.

மான்கள், காட்டுப் பன்றிகள் அதிக அளவு குடியிருப்புகளை நோக்கிப் படையெடுக்கின்றன. விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகள் புகுந்து பயிர்களை தின்றும், காலால் மிதித்தும் நாசம் செய்கின்றன.

காடுகளில் தண்ணீர் இல்லா ததால் வனத் துறையினரால் சிறு வன விலங்குகளைக்கூட கட்டுப்படுத்த முடியவில்லை. காடுகளில் உள்ள மரங்களும் உருக்குலைந்து காணப்படு கின்றன. வனத்தையும், வன விலங் குகளையும் பாது காக்க வேண்டிய வனத் துறை அதற்கான புதிய வனத் திட்டங்களை உருவாக்க முயற்சி செய்யவில்லை.

மதுரை மாவட்ட வன அலு வலராக இருந்த சமர்தா, மூன்று மாதங்களுக்கு முன் உயர் படிப் புக்காக விடுமுறையில் சென்றார். வில்லிபுத்தூர் வன உயிரினக் காப்பாளர் முகமது ஷபாப் மதுரை வன மண்டலத்தைக் கூடுதல் பொறுப்பாகக் கவனிக்கிறார். அவரால் வாரம்தோறும் மதுரை மாவட்ட வன அலுவலகத்துக்கு வர முடியவில்லை.

மாவட்ட வன அலுவலரின் வழிகாட்டுதல் இல்லாமல் வனத்துறை ஊழியர்கள் பணி யில் தொய்வு ஏற்பட்டுள்ளது. வனத் துறையில் போதிய ஊழியர்களும் இல்லாததால் வனத்துறையினரும் அன்றாட அலுவலகப் பணி, வழக்கமான கண்காணிப்புப் பணிகளை மட் டுமே மேற்கொள்கின்றனர்.

மதுரை கடச்சனேந்தல் அருகே கடந்த ஆண்டு 47 மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டன. அவற்றைக் கொன்றவர்களை வனத்துறை இதுவரை கண்டு பிடிக்கவில்லை. அதனால் வன விலங்குகள் வேட்டை அதிக ரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x