Published : 05 Aug 2019 10:29 AM
Last Updated : 05 Aug 2019 10:29 AM

முதல்வர், அமைச்சர் இடையே மோதல் பாஜக, மக்கள் நீதி மய்யம் விமர்சனம்

புதுச்சேரி 

முதல்வர் நாராயணசாமிக்கும், காங்கிரஸ் மாநில தலை வரும், அமைச்சருமான நமச்சிவாயத் துக்கும் இடையிலான மோதலை பாஜக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் விமர்சித்துள்ளன.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசில் அமைச்சரவைக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது. பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டில் குறைவான நிதி பொதுப்பணித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி முதல்வர் நாராயணசாமியின் நிகழ்வுகளை மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் புறக்கணித்து வருகிறார். காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இதன் பாதிப்பு நிகழத் தொடங்கியுள்ளது.

இச்சூழலில் இம்மோதலை எதிர்க்கட்சிகள் விமர்சிக்க தொடங் கியுள்ளன. பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறுகையில், “புதுச்சேரி காங்கிரஸ் கடந்த 3 ஆண்டுகளில் எந்தத் திட்டத்தையும் சரியாக செயல்படுத்தவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்படும் நிலையை கருத்தில் கொண்டே அமைச்சர் நமச்சிவாயம் செயல்படத் தொடங்கியுள்ளார். புதுச்சேரி காங்கிரஸ் அரசை எதிர்க்கட்சிகள் கவிழ்க்க நினைப்பதாக கூறுவது பொய். காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களே கவிழ்க்க முயற்சிக்கின்றனர். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை பாஜக மிரட்டுவதாக முதல்வர் நாராயணசாமி கூறியது பொய் பிரச்சாரமாகியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் தலைவர் எம்.ஏ.எஸ்.சுப்ரம ணியன் கூறுகையில், “ஒரு மாநிலம் முன்னேற்றம் அடைய முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு இடையி லான ஒற்றுமை மிக, மிக அவசியம். ஆனால் புதுச்சேரியில் ஏற்கெனவே மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநருக்கும் ஒற்றுமை இல்லாமல் உள்ளது. இதுபோன்ற நிலையில் மாநில முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.

துணைநிலை ஆளுநருக்கும், முதல்வருக்கும் இடையிலான மோதலால் புதுச்சேரி பாதிக்கப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கும். இந்த மோதலால் ஏற்கெனவே இரு பிரிவாக உள்ள அதிகாரிகள் தற்போது மூன்று பிரிவாக உருவாவார்கள். இந்த பிரிவு புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல் உள்ளிட்டவைகளை அதிகரிக்கச் செய்யும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x