

2016 சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். இன்னும் ஒரு மாதத்துக்குள் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்க உள்ளோம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக சிறைகளில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ள ஆயுள் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் கோவையில் நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் தின்போது சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 10 ஆண்டுகளுக் கும் மேலாக சிறையில் இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறை வாசிகளை விடுவிக்க வேண்டும். குற்றவாளி வருந்தி, திருந்தி வாழ வாய்ப்பளிப்பதுதான் தண்டனை. எனவே, பல ஆண்டுகாலம் அவர்களை சிறையில் அடைத்து வைப்பது சரியானதல்ல. சித்தி ரவதை முகாம்களை மூடி கைதி களை பொதுச் சிறையில் வைத்து விசாரிக்க வேண்டும்.
80 வயதைக் கடந்தவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் கொடுமை இங்கு தொடர்கிறது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலையில் அரசியல் குறுக்கீடு உள்ளது.
2016 சட்டப்பேரவைத் தேர்த லில் 234 தொகுதிகளிலும் நாங்கள் தனித்துப் போட்டியிட உள் ளோம். 11 தொகுதிகளில் ஏற்கெனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காமராஜர் பிறந்தநாள் விழாவில் 10 வேட்பாளர்களையும், சிவாஜி கணேசன் நினைவு தினத்தில் சில வேட்பாளர்களையும் அறிவிக்க உள்ளோம். ஒரு மாதத்தில் அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்து தேர்தல் பணிகளைத் தொடங்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.