மத்திய அரசு ஒதுக்கிய ரூ.3,600 கோடி நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தணிக்கை துறை அறிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம்

மத்திய அரசு ஒதுக்கிய ரூ.3,600 கோடி நிதி திருப்பி அனுப்பப்படவில்லை: தணிக்கை துறை அறிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கம்
Updated on
1 min read

சேலம்

தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி ரூ.3,600 கோடி பயன்படுத்தப்படாமல் மீண்டும் மத்திய அரசிடமே ஒப்படைக்கப்பட்டது என்பது தவறான தகவல். தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதி முழுவதும்செலவிடப்பட்டுள்ளது என்று  முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். 

சேலம் அரசுப் பொருட்காட்சி தொடக்க விழா, நிறைவுற்ற பணிகள் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை சேலத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை வகித்தார். செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் சங்கர் வரவேற்றார். 

சேலம் அரசுப் பொருட்காட்சியை தொடங்கி வைத்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

எம்ஜிஆர் காலத்தில் 1978-ம் ஆண்டு அரசுப் பொருட்காட்சி முதன் முதலாக சேலத்தில் தொடங்கப்பட்டது. அவரால் தொடங்கி வைக்கப்பட்ட பொருட்காட்சியை, அதே சேலத்தில் தொடங்கி வைப்பது எனக்கு பெருமையளிக்கிறது. 

எதிர்க்கட்சியினர் இந்த அரசுஎன்ன செய்தது என்று கேட்கிறார்கள். இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மட்டும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த  11,571 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்பட ரூ.30.96 கோடி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் உள்ள ஆறுகளில் மாசுபட்ட நீர் கலக்கக்கூடாது என்பதற்காக திட்டம் வகுத்து வருகிறோம். கோதாவரி- காவிரி- குண்
டாறு நதிகளை இணைத்து தமிழகத்துக்கு 125 டிஎம்சி நீரை கொண்டு வருவதற்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு வழங்கிய ரூ.3,600 கோடி நிதியை பயன்படுத்தாமல் திரும்ப வழங்கிவிட்டதாக தணிக்கை துறையை மேற்கோள் காண்பித்து, சில பத்திரிகைகள் தவறான செய்தியை வெளியிட்டுள்ளன. உண்மையில், ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிதியை வழங்கும் முன்னர் மாநில அரசு நிதியை ஒதுக்கும். ஆனால், சில இனங்களில் மத்திய அரசு நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்போது, மாநில அரசு நிதியை விடுவிக்க முடியாது. ஆனால், அந்த நிதியானது, சேமிப்பாக சேர்க்கப்பட்டு, அடுத்த ஆண்டில் பயன்படுத்தப்படும். இந்த நடைமுறை அதிமுக ஆட்சியில் மட்டுமல்லாது, திமுக ஆட்சியிலும் இருந்தது. எனவே, மாநிலத்துக்கு ஒதுக்
கப்பட்ட மத்திய அரசின் நிதி ஒருபோதும் திருப்பி அனுப்பப்பட்டதில்லை. தமிழகத்துக்கான மத்திய அரசின் நிதி முழுவதும் தமிழகத்தில் செலவிடப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in