

சென்னை
தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச் சலால் 1,600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தடுப்பு நடவடிக்கைகளை சுகா தாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் தாக்கம் அதிகரித்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்தக் காய்ச்சல்களால் பாதிக்கப் பட்டு அரசு மற்றும் தனியார் மருத் துவமனைகளில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலின் தீவிரத்தால் உயிரிழப்புகளும் நிகழ்கின்றன.
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை டெங்கு காய்ச்சலால் 1,200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட் டுள்ளனர். இதேபோல், கடந்த 7 மாதங்களில் 435 பேர் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக மத்திய, மாநில அரசுகளின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, “தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலைத் தடுக்க தேவை யான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு குறைவாகத்தான் உள்ளது.
டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் நல்ல தண்ணீரில் உற்பத்தியாகும். எனவே, டயர், உடைந்த சிமென்ட் தொட்டிகள், ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் தட்டுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனை பொதுமக்கள் செய்தாலே 90 சதவீதம் டெங்கு பாதிப்பை தடுக்க முடியும். இதேபோல் பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவி சுத்தமாக வைத்திருந்தால் பன்றிக்காய்ச்சல் பாதிப்பைத் தடுக்கலாம். எனவே பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்” என்றனர்.